காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் மேஜைப் பந்து வீரர்கள் சரத்கமல், அமல்ராஜ், சத்தியன் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையை முதல் வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பளு தூக்கும் போட்டியில் 2-வது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக் கப்பட்டது.

இந்நிலையில், மேஜைப் பந்து குழு விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல், அமல்ராஜ், சத்தியன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

இவர்களுக்கும் தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு தனித்தனியாக வாழ்த்துக் கடிதங்களும் அனுப்பியுள்ளார்.

அக்கடிதங்களில், ‘காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது ஊக்கத்தொகை பெற நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள்.

மேலும், இதுபோன்ற வெற்றிகளை குவிக்க எனது வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்