மஞ்சம்பட்டி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் பலி: திருக்கானூர்பட்டியில் 42 பேர் காயம்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை உதைத்ததில் மாடுபிடி வீரர் ஒருவர் பலியானார். தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 42 பேர் காயமடைந்தனர்.

மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 659 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்க 314 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். இதில், காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டில் காளை உதைத்ததில் படுகாயமடைந்த மணப்பாறை அருகேயுள்ள சிதம்பரத்தான்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் மணிகண்டனை (25), மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர. பின்னர், திருச்சியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காளை பலி...

இதுதவிர, வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட அல்லூரைச் சேர்ந்த சண்முகத்தின் காளை, மைதானத்துக்கு வெளியே வந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மற்றொரு காளை, மணப்பாறை 60 அடி பாலம் அருகே தண்டவாளத்தில் ஓடியபோது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் காயமடைந்தது.

42 பேர் காயம்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டியில் புனித அந்தோனியார் கோயில் பொங்கல் விழா ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. அமைச்சர் இரா. துரைக்கண்ணு ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.வைத்திலிங்கம், கு.பரசுராமன், ஆட்சியர் ஆ.அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 900 காளைகளும், 350 காளை பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில், காளைகள் முட்டி, 42 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

33 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்