முட்டைகோஸ் கிலோ ரூ.4, கத்தரிக்காய் ரூ.5: கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை தொடர்ந்து வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தைக்கு காய் கறிகள் வரத்து அதிகரிப்பால் அவற்றின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய் கறிகள் வரத்து அதிகமாக உள்ளது. அதன் காரணமாக பல்வேறு காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. காய்கறிகள் வரத்து அதிகமாகவே இருப்பதால், அவற்றின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

விலை விபரம்

நேற்றைய நிலவரப்படி ரூ.9 வரை உயர்ந்திருந்த தக்காளி விலை கிலோ ரூ.6 ஆகக் குறைந்திருந்தது. அதேபோன்று முட்டைகோஸ் விலை ரூ.4 ஆகவும், கத்தரிக் காய் மற்றும் முள்ளங்கியின் விலை ரூ.5 ஆகவும், பீட்ரூட் ரூ.7 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளன. மற்ற காய் கறிகளான உருளைக்கிழங்கு ரூ.14, பீன்ஸ் ரூ.15, அவரைக்காய் ரூ.12, வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவை தலா ரூ.10-க்கு விற்கப்படு கின்றன.

வெங்காயம் கிலோ ரூ.25, சாம்பார் வெங்காயம் ரூ.26, முருங்கைக்காய் ரூ.35 என விற்கப்படுகின்றன. இந்த 3 காய்கறிகளைத் தவிர மற்ற காய்கறிகள் அனைத்தின் விலையும் கிலோ ரூ.15-க்கும் குறைவாகவே உள்ளன.

இதுதொடர்பாக கோயம் பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க செயலர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறிய தாவது:

கோயம்பேடு சந்தைக்கு கடந்த ஒரு மாதமாக காய்கறிகள் அதிக அளவில் வருகின்றன. முன்பு அதிகபட்சமாக 350 வண்டிகள் வரும்.

லாபம் குறைவு

தற்போது 450 வண்டிகளில் காய்கறிகள் வருகின்றன. குறிப்பிட்ட அளவுக்கு மேல் விற்க முடியவில்லை. அதனால் விலை குறைத்து விற்க வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வியாபாரி களுக்கு லாபம் குறைவாகவே கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

56 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்