தொண்டர்களின் புகார்கள் குறித்து ஆய்வு: மார்ச் இறுதியில் திமுக நிர்வாகிகள் மாற்றம்?

By செய்திப்பிரிவு

தொண்டர்களின் புகார்களை ஆய்வு செய்து வரும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்ச் இறுதியில் நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.

திமுக தொண்டர்கள் தங்கள் குறைகளை ரகசியமாக தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்க, அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1-ம் தேதி முதல் ஆய்வுக் கூட்டங்களை ஸ்டாலின் நடத்தி வருகிறார். மார்ச் 22-ம் தேதி வரை இந்த கள ஆய்வு நடக்க உள்ளது. மாவட்ட வாரியாக நடக்கும் கள ஆய்வில், ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சியினரின் குறைகளைக் கேட்டு வருகிறார். நேற்று காலை சேலம் மாவட்ட நிர்வாகிகளும், மாலையில் தருமபுரி மாவட்ட நிர்வாகிகளும் கள ஆய்வில் பங்கேற்றனர்.

இது தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

திமுகவில் கடைநிலை நிர்வாகிகள், தொண்டர்களை மாவட்ட வாரியாக அழைத்து மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இது, தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகள் குறைந்த மாவட்டங்களில் அதற்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

‘உங்களின் புகார்கள், பிரச்சினைகளை நான் கவனித்துக் கொள்கிறேன். எப்போது தேர்தல் வந்தாலும், திமுக வேட்பாளர்கள்தான் வெற்றி பெற வேண்டும். அதற்காக, அனைவரும் ஒற்றுமையுடன், கடினமாக உழைக்க வேண்டும்’ என கட்சியினரிடம் ஸ்டாலின் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். அத்துடன் தொண்டர்கள் அளித்து வரும் புகார்கள் குறித்து ஆய்வு செய்ய குழுக்களையும் அமைத்துள் ளார்.

ள ஆய்வு முழுமையாக முடிந்த பிறகு இந்தக் குழுவினர் ஸ்டாலினிடம் அறிக்கை அளிப்பர். மார்ச் இறுதியில் மாவட்டம், நகரம் உள்ளிட்ட நிலைகளில் நிர்வாகிகள் மாற்றம் போன்ற முக்கிய நடவடிக்கைகளை ஸ்டாலின் எடுப்பார் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

32 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்