அனல்மின் நிலையங்களில் வெளியேறும் சாம்பலை மின்வாரியமே அகற்ற முடிவு

By செய்திப்பிரிவு

அனல்மின் நிலையங்களில் மின்உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நிலக்கரியில் இருந்து வெளி யேறும் சாம்பலை மின்வாரியமே அகற்ற முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 4,300 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் மின்உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நிலக்கரியில் இருந்து டன் கணக்கில் சாம்பல் வெளியேறு கிறது. அந்த சாம்பலை அகற்ற சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதன்படி, மொத்த சாம்பலில் 20 சதவீதத்தை சிறு தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. மேலும், சாம்பலை அகற்ற ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்துக்கு ஒரு டன் சாம்பல் ரூ.700-க்கு விற்கப்படு கிறது. இந்நிலையில், இந்த சாம்பலை மின்வாரியமே அகற்ற முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ``நிலக்கரி சாம்பலை சிமென்ட் நிறுவனங்கள் தங்களது சொந்த செலவில் இயந்திரங்களை அமைத்து அகற்றுகின்றன. இதனால், அந்த நிறுவனங்களுக்கு சலுகை விலையில் சாம்பல் விற்கப்படுகிறது.

இனிமேல் சாம்பலை அகற்றுவதற்கான இயந்திரங்களை மின்வாரியமே வாங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, மேட்டூர், சென்னை மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் ரூ.34 கோடி செலவில் இயந்திரங்கள் வாங்கிப் பொருத்தப்படும். அதன் பிறகு, சிமென்ட் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் சாம்பல் வழங்கப்பட மாட்டாது ”என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

ஆன்மிகம்

12 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

மேலும்