தேசிய மருத்துவ ஆணைய மசோதா குறித்த கேள்வி - பதில் அறிக்கை இணையதளத்தில் வெளியீடு

By செய்திப்பிரிவு

தேசிய மருத்துவ ஆணைய மசோதா குறித்த கேள்வி, பதில் அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளி யிட்டுள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா, கடந்த 29-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி மக்களவையில் மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா விவாதத்துக்கு வந்தது.

அன்றைய தினம் ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அந்த மசோதா மீது விவாதம் நடைபெறவில்லை.

நாடாளுமன்ற நிலைக்குழு

இதையடுத்து மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா பற்றி கேள்வி, பதில் வடிவில் அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை www.mohfw.gov.in என்ற தனது இணையதளத் தில் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

25 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

23 mins ago

தமிழகம்

45 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்