தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸூக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கட்சியின் அமைப்புகளில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை எடுத்து வருகிறார். எனினும் காங்கிரஸ் மாநில தலைவர்கள் தற்போது மாற்றப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்து இருந்தார். தேவை ஏற்பட்டால் சில மாநிலங்களில் மட்டும் தலைவர்கள் மாற்றப்படலாம் என கூறி இருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது:

"தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளது. இதற்கான நடவடிக்கையை கட்சி மேலிடம் விரைவில் தொடங்கும் என நம்புகிறேன். தமிழக காங்கிரஸூக்கு விரைவில் நல்ல காலம் பிறக்கும்" எனக்கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் தற்போது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

சினிமா

35 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்