சுகாதாரத்துறை திட்டங்களுக்கு தனி சமூக ஊடக வலைதளம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் குறும்படங்களை திரையிட பிரத்யேக சமூக ஊடக வலைதளத்தை (பேஸ்புக், டிவிட்டர், யூடியூப்) அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கான பிரத்யேக சமூக ஊடக வலைதளம் (பேஸ்புக், டிவிட்டர், யூடியூப்), மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் குறும்படங்கள் திரையிட 15 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய அமைச்சர் கூறியதாவது:

''மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கவும், புதிய திட்டங்களை தெரிவிக்கவும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையின் சாதனைகளை தெரிவிக்கவும், பொது மக்களுக்கு எழும் பொதுவான சுகாதாரம் குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வசதியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொது மக்கள் படித்து தெரிந்துகொள்வதோடு கருத்துகளை தெரிவிக்கவும் மற்றும் கேள்விகளை எழுப்பவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகநூல் பக்கத்தில் பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை அளிப்பதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் உயர் அலுவலர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப் படவுள்ளது. மேலும் பொது மக்களிடையே மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வினை அதிகரிக்க யூடியூப் சேனல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு காணொலிக் காட்சிகள் பதிவேற்றப்படும்.

மேலும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகளின் காணொலிக் காட்சிகளை பொது மக்களின் விழிப்புணர்விற்காக திரையிட 15 தொலைக்காட்சி பெட்டிகள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.''

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்