தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய தயார்: விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா மரணம் தொடர் பான விசாரணை ஆணையத்தில் தேவையான ஆவணங்களை கேட்டால், அதை தாக்கல் செய் யத் தயாராக இருக்கிறேன் என்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின் மருத்துவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இருந்து, நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று விசாரணை ஆணையத்தில் நீதிபதி அ.ஆறுமுகசாமி முன்பு ஆஜரானேன். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். ஜெயலலிதா மர ணம் தொடர்பாக சில ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்து இருக்கிறேன். விசாரணை ஆணையம் கேட்டால், மேலும் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறேன். மருத்துவம் தொடர்பான கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்திருக்கிறேன். மீண்டும் வரும் 22-ம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளிக்க இருக்கிறேன். விசாரணை முடிந்த பிறகு, விரிவாக விளக்கம் அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் விசாரணையில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார். நாளை, ஜெயலலிதாவுக்கு பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமி ஆஜராக உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

சினிமா

57 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்