திருமாவளவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீது அண்ணா சதுக்கம் போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், திருமாவளவன் கலந்து கொண்டார். இந்நிலையில் போராட்டத்துக்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் மெரினாவில் திரண்டு வாகனங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் கூறும்போது, “எந்தவித மான முன் அனுமதியும் இன்றி கூட்டமாகச் சேர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாகனங்களில் அணிவகுத்துச் சென்றுள்ளனர். இது குற்றமாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்