ஆர்.கே.நகரில் விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனரா?- காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஆர்.கே. நகரில் நடிகர் விஷாலை முன்மொழிந்த இருவர் கடத்தபட்டு, மிரட்டப்பட்டனரா என விசாரணை செய்யவும், முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியவும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து கடந்த டிச.21 அன்று ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் திமுக ,அதிமுக, டிடிவி தினகரன் தவிர சுயேட்சை வேட்பாளராக நடிகர் விஷாலும் ஆர்.கே.நகர் இடை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனு பர்சீலனையில் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

விஷாலுக்கு முன்மொழிந்த 10 பேரில் 2 பேர் தாங்கள் முன்மொழியவில்லை என அறிவித்து பின்வாங்கினர். அப்போது, அவரது வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபக் ஆகியோர் கடத்தப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் விஷால் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆடியோவையும் வெளியிட்டார்.

இந்நிலையில் ஆடியோ உண்மையானதா?, பரபரப்பை ஏற்படுத்த விஷால் ஆடியோ வெளியிட்டாரா?, மதுசூதனின் ஆதார்வாளர்கள் மிரடடியும், கடத்தியும் வைத்தனரா? என விசாரிகக்கோரி சென்னை மாநகர காவல்துறை, தேர்தல் ஆணையத்திடம் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் டிசம்பர் 6-ம் தேதி புகார் அளித்தார்.

இந்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால், தன் புகார் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜ் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததது.

தேவராஜன் புகார் குறித்து விசாரிக்கவும், விசாரணைக்கு பின்னர் புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கவும் உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்