மீஞ்சூர் அருகே பாழடைந்த கிணற்றில் ஐம்பொன் கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

பாழடைந்த கிணற்றில் இரண்டரை அடி உயரம் உள்ள ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ளது கொண்டைக்கரை கிராமம். இக்கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வயல்வெளியில் இருந்த பாழடைந்த கிணற்றில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மீன் பிடி வலையில் ஐம் பொன் சிலை ஒன்று சிக்கியது.

இதையடுத்து, அங்கு சென்ற மக்கள் அந்த கிருஷ்ணர் சிலையை கிராமத்தில் உள்ள கோயிலில் வைத்தனர். பிறகு, அவர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடம் விரைந்த வருவாய்த் துறை அதிகாரிகள், ஐம்பொன் சிலையை கைப்பற்றி, பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

அந்த சிலையை இன்று அரசு கருவூலத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கிணற்றில் கிடந்த ஐம்பொன் சிலை குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்