என்எல்சி பேச்சுவார்த்தை தோல்வி: வேலைநிறுத்தம் குறித்து 10-ம் தேதி அறிவிப்பு

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் இன்று நடைபெற்ற இரண்டாம்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. திட்டமிட்டமிடப்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதுதொடர்பான தேதி வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படும் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

நெய்வேலி என்எல்சியில் பணிபுரியக்கூடிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 2012-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் மற்றும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியம், அடிப்படை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 20-ம் தேதி புதுச்சேரியில் உள்ள உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் என்எல்சி நிர்வாகத் தரப்பில் இருந்து யாரும் கலந்துகொள்ளாததால் பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் வகையில் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று 4-ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் என்எல்சி நிர்வாகத் தரப்பினர், தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனால், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தைக்குப் பின் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், " திட்டமிடப்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். வேலை நிறுத்தம் குறித்து வரும் 10-ம் தேதி நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்து வேலை நிறுத்தத் தேதி அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 mins ago

சினிமா

10 mins ago

சினிமா

15 mins ago

இந்தியா

23 mins ago

க்ரைம்

20 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்