அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடந்த பேராசிரியர் தேர்வில் ஊழல்: புதிதாக தேர்வு நடத்த முத்தரசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த தேர்வில் ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதால், இத்தேர்வினை முழுவதுமாக ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வியாழன்) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 16 ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்க்கவும் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மதிபெண்களில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடந்த பேராசிரியர் தேர்வில் ஊழல்கள் நடந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தேர்வு முடிவு ரத்து செய்யபட்டிருப்பது ஊழலை ஊர்ஜிதம் செய்வது போல் உள்ளது.

எனவே இத்தேர்வினை முழுவதுமாக ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த வேண்டும். அத்துடன் பணியில் உள்ள நீதிபதிகளை கொண்டு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறேன்’’ என முத்தரசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

வணிகம்

40 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்