சென்னை மழை பாதிப்புகள் மத்தியக் குழு இன்று ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

ஒக்கி புயல் பாதிப்புகளையும் சென்னை வெள்ள பாதிப்பு களையும் ஆய்வு செய்ய மத்திய குழு வந்துள்ளது. கன்னியாகுமரிக்கு ஒரு குழு சென்ற நிலையில் சென்னைக்கு தனியாக ஒரு குழு வந்துள்ளது. இதன்படி, மத்திய உள்துறை இணை செயலர் சஞ்சீவ்குமார் ஜிண்டால் தலைமையில் சென்னை வெள்ள பாதிப்புகளை பார்வையிட, மத்திய நிதித்துறை செலவினப்பிரிவு துணை இயக்குநர் முகேஷ்குமார், மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக முதுநிலை ஆலோசகர் எஸ்.சி.சர்மா, கோவையில் உள்ள மத்திய நீர் வளம், காவிரி மற்றும் தென்னக நதிகள் சங்கத்தின் இயக்குநர் ஜி.நாக மோகன் ஆகியோரும் வந்துள்ளனர்.

நேற்று சென்னை வந்த மத்தியக் குழுவினர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். முன்னதாக காலை 10 மணிக்கு தமிழக தலைமைச் செயலர் (பொறுப்பு) கே.சண்முகத்தை சந்திக்கின்றனர்.

அதன்பின் ராயபுரம், பேசின் பாலம், ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கோயம்பேடு, அண்ணா நகர், கொன்னூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளை பார்வை யிடுகின்றனர். பிறகு திருவள்ளூரில் கார்கில் நகர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடிச்சூர், வரதராஜபுரம், பல்லாவரம், பள்ளிக்கரணை, கீழ்கட்டளை ஆகிய இடங்களுக்குச் செல்கின்றனர். இவர்களுடன் தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந் திர ரத்னு சென்று பாதிப்பு குறித்து விளக்கம் அளிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்