நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: அதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதையடுத்து எம்.பி.க்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர், வரும் 15-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பங்கேற்பது தொடர்பாக அதிமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிசாமி தலைமையில் மாலை 3.30 முதல் 5.15 மணி வரை நடந்தது.

சசிகலா புஷ்பா மற்றும் தினகரன் ஆதரவு எம்.பி. ஒருவரைத் தவிர, மீதமுள்ள எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நவநீதகிருஷ்ணன் உட்பட 6 எம்.பி.க்கள் டிடிவி தினகரன் அணியில் இருந்தபோது, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என முதல்வர் கே.பழனிசாமி அணி சார்பில் நாடாளுமன்ற செயலரிடம் வலியுறுத்தப்பட்டது. தற்போது, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட எம்.பி.க்கள் மீண்டும் முதல்வர் கே.பழனிசாமியுடன் இணைந்துள்ளதால், அவர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிடவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

14 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்