போலீஸ் அதிகாரி என்று கூறி நகைக்கடை ஊழியரிடம் நகை வழிப்பறி

By செய்திப்பிரிவு

போலீஸ் அதிகாரி என்று கூறி நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் நகை வழிப்பறி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மேலேரிபாக்கம் விநாயகபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (43). இவர் புரசைவாக்கத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தியாகராயநகர், மங்கேஷ் தெரு வழியாக நகைக்கு ஹால்மார்க் முத்திரையிட 4 மோதிரம், ஒரு செயின் என 9 பவுன் நகைகளை எடுத்துச் சென்றார். அப்போது, அவரை 4 பேர் வழிமறித்து, தங்களை காவல் துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். மேலும், ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நடப்பதால் வாக்காளர்களுக்கு கொடுக்க நகையை எடுத்துச் செல்கிறார்களா என்று தாங்கள் சோதித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

பின்னர் லட்சுமணனிடம் இருந்த 9 பவுன் நகையை வாங்கி விசாரித்துக்கொண்டிருந்த அவர்கள், திடீரென அங்கிருந்து நழுவிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

குற்றப்பிரிவு போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

3 mins ago

இந்தியா

46 mins ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்