மணல் தட்டுப்பாட்டைபோக்க வேண்டும்வாசன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் மணல் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் 80 சதவீத கட்டுமான பணிகள் தடைப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்குகூட மணல் கிடைக்கவில்லை. மேலும், கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி சிரமப்படுகின்றனர். மணல் தட்டுப்பாடு மற்றும் கம்பி, சிமென்ட் போன்ற பொருட்களின் விலை உயர்வு காரணங்களால் வீடு கட்டும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்