‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சார்பில்காஞ்சியில் இன்று மகளிர் திருவிழா; பரிசு மழையில் நனைய வாருங்கள்.. அனுமதி இலவசம்

By செய்திப்பிரிவு

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சார்பில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா கலையரங்கத்தில் மகளிர் திருவிழா இன்று (டிச.10) நடைபெறுகிறது. கருத்துரைகள், பேச்சரங்கம், போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், சிறப்புப் பரிசுகள், பரிசுகள், சுவையான மதிய உணவு என பலவித மகிழ்வான அனுபவங்களைப் பெற மகளிர் அனைவரையும் ‘தி இந்து’ அன்புடன் வரவேற்கிறது.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணைப்பிதழான ‘பெண் இன்று’ சார்பில் காஞ்சிபுரத்தில் மகளிர் திருவிழா இன்று நடத்தப்படுகிறது. காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அறிஞர் அண்ணா கலையரங்கத்தில் இந்த விழா இன்று காலை 9 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. காஞ்சிபுரம் சரக டிஐஜி, பி.சி.தேன்மொழி, காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் பி.கல்பனா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் காலை 10 மணிக்கு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைக்கின்றனர்.

சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பி.சி.தேன்மொழி சிறப்புரை ஆற்றுகிறார். பெண்களுக்கான உடல், மனநல ஆலோசனைகளை பி.கல்பனா சிறப்புக் கருத்துரையாக வழங்குகிறார். தொடர்ந்து, வாசகிகளை உற்சாகப்படுத்தும் வகையில், திருப்போரூர் புதுவினைக் கலைக் குழுவினர் வழங்கும் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி இடம்பெறும்.

இதைத் தொடர்ந்து, ‘யாருக்குச் சுமை அதிகம்?’ என்ற கருத்துடன் நடக்கும் சிறப்பு பேச்சரங்கில், ‘வேலைக்குச் செல்லும் பெண்களுக்கே’ என்ற தலைப்பில் எஸ்.பாக்கியலட்சுமியும், ‘இல்லத்தரசிகளுக்கே’ என்ற தலைப் பில் டி.தேவியும் அனல் பறக்க விவாதிக்க உள்ளனர். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் எஸ்.சங்கீதா தலைமை வகிக்கிறார்.

மாலை நிகழ்ச்சிகளை சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே உடனடிப் போட்டி, திடீர் போட்டி என பல்வேறு போட்டிகள், பம்பர் பரிசுக்கான சிறப்பு குலுக்கல் ஆகியவை நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்கும் பெண்களுக்கு ஏராளமான பரிசுகள் காத்திருக்கின்றன. மதிய உணவுடன் நிச்சயப் பரிசுகளும் உண்டு. விழாவில் பெண்கள் மட்டும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

விழாவையொட்டி அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில், ‘தி இந்து’ குழுமப் புத்தகங்கள் மற்றும் ‘தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகம் ஆகியவை விற்பனைக்குக் கிடைக்கும்.

மகளிர் திருவிழாவை ‘தி இந்து’வுடன் இணைந்து தி சென்னை சில்க்ஸ், லலிதா ஜுவல்லரி, ஜெப்ரானிக்ஸ், ஹோட்டல் எஸ்எஸ்கே கிராண்ட், மை டிவி ஆகியவை வழங்குகின்றன.

போட்டிகளில் வெற்றிபெறும் வாசகிகளுக்கு சாஸ்தா கிரைண்டர்ஸ், பிருத்வி, உடுப்பி ருசி, பச்சையப்பாஸ் சில்க்ஸ், ட்வின் பேர்ட்ஸ், கோகுல் சாண்டல், மந்த்ரா கோல்ட் கோட்டிங்ஸ், செய்யாறு ஸ்ரீகுமரன் ஜுவல்லர்ஸ், அன்னை டேட்ஸ், ராணிப்பேட்டை ஜீகே வேர்ல்டு ஸ்கூல், வெற்றி அரசு ஐஏஎஸ் அகாடமி, ராஜம் செட்டி & சன்ஸ், எஸ்.எம் சில்க்ஸ், பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் டிஎன்பிஎஸ்சி கோச்சிங் சென்டர், காஞ்சிபுரம் ஐப்ளே ஐலேர்ன் ப்ளே ஸ்கூல் ஆகிய நிறுவனங்கள் பரிசுகளை வழங்குகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்