வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிப்பு; வருவாய் நிர்வாக ஆணையர் கத்யகோபால் தகவல்

By செய்திப்பிரிவு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், மத்திய நீர்வளத் துறை அறிவுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் உள்ள அணைகள், நீர் நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் தெரிவித்தார்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியை கடந்த நவ.29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஒக்கி புயல் தாக்கியது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் பாதிப்புகள் உருவாகின. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கியது. மழையும் தொடர்ந்து பெய்ததால், அம் மாவட்டம் தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது.

இந்நிலையில் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் கூறியதாவது:

கன்னியாகுமரி பகுதியில் மின்சாரம் 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், குழித் துறையில் 30 சதவீதம் அளவுக்கு மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. இரவுக்குள், 60 சதவீதம் பகுதிகளில் மின் விநியோகம் சீரமைக்கப்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவுக்கு, மாவட்டம் முழுவதுக்கும் மின் இணைப்பு அளிக்க முயற்சித்து வருகின்றனர். சில காரணங்களால் தடைபட்டாலும் இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டுவிடும். இப்பணிகளுக்காக 2,500 மின் பணியாளர்கள் களமி றக்கப்பட்டுள்ளனர். இது தவிர, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் கேள்வி களுக்கு அவர் பதிலளித்ததாவது:

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏடிஎம் இயந்திரங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

மின் விநியோகம் வழங்கப்பட்டால்தான், ஏடிஎம் இயந்திரங்கள் இயங்கும். தற்போது மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

மத்திய நீர்வள ஆணையம் சில பகுதிகளைக் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார்களே?

மத்திய நீர்வள ஆணையம், பொதுவாக அறிவுரைகளை வழங்குவார்கள். இந்திய வானிலை ஆய்வு மையம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் குறிப்பாக டிசம்பர் 4,5,6 தேதிகளைத் தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் அதிக மழை இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது பின்னர் தெரியவரும். இதன் காரணமாக வட தமிழகப் பகுதிகளில் அதிக மழை வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. அதே நேரத்தில், மத்திய நீர்வள ஆணையத்திடம் இருந்து, வடக்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழைப் பொழிவு இருக்கும்.

அணைகள் நிரம்பும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வந்துள்ளது. இது தொடர்பாக, பொதுப்பணித் துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் அளித்துள்ளோம். பொதுப்பணித் துறை அதிகாரி களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர்கள் அணைகளின் நீர்மட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். தேவையான நேரத்தில், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உபரி நீரைத் திறந்து விட வேண்டும். தேவைப்பட்டால் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். நாங்களும் நீர்மட்டங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

மேலும், அணைகள் நிரம்பும்போது வெளியேறும் உபரி நீர், முதலில் ஏரி, குளங்களுக்குச் செல்லும். எனவே, பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படும் நீராதாரங்களின் கரைகளைப் பாதுகாக்க, மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் அதிகளவில் காணாமல் போனதாக தகவல் கூறப்படுகிறதே?

மீனவர்கள் 100 சதவீதம் மீட்கப்பட வேண்டும். தற்போது மீனவர்கள் பலர் லட்சத்தீவுப் பகுதியில் இருப்பதாக தகவல் வந்துள்ளன. இத்தகவல்களை நாங்கள் கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப் படையிடம் அளித்து, அவர்கள் மீட்புப் பணிக்குச் சென்றுள்ளனர். இருப்பினும் காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கையில் குழப் பம் உள்ளது. மீனவ சங்கங்கள்தான் பெயர்கள், விவரங்களை அளிக்க வேண்டும். இருப்பினும் தகவல்களைப் பெற்று மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

புயல் சேதம் குறித்து கணக் கெடுக்கப்படுகிறதா?

மழைநீர் முழுமையாக வெளியேறினால்தான் கணக்கெடுக்க முடியும். பயிர்கள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு, விவசாயி களுக்கு விடுபடாமல் நிவாரணம் வழங்கப்படும். இதுவரை மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர்.

மதுராந்தகம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளதே?

மதுராந்தகத்தில் தானியங்கி அமைப்புகள் உள்ளன. 25 அடி உயரம் நீர் நிறைந்ததும், தானாகவே தண்ணீர் வெளியேறும். நீர்மட்டம் அதிகரிக்கும்போது, தாழ் வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப் படுவார்கள் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்