சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

By செய்திப்பிரிவு

‘‘சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்தது. இதுதொடர்பாக பேசிய முதல்வர் பழனிசாமி தரப்பினர், சசிகலா குடும்பத்தினர் தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் தினகரன்,‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாதான் முதல் குற்றவாளி. அவர் அரசு ஊழியர், அவருடன் இருந்ததால்தான் சசிகலா மீது வழக்கு. சசிகலா ஏமாற்றியிருந்தால் ஜெயலலிதா ஏன் குற்றவாளியாக வேண்டும். நாங்கள் ஜெயலலிதா உடன் இருந்ததால்தான் பல வழக்குகளை சந்தித்துள்ளோம்’’ என்றார்.

அதேபோல், சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறும்போது, ‘‘சசிகலா கடந்த 1996-ல் இருந்து விசாரணை வளையத்தில் உள்ளார். ஜெயலிலிதா அவரை முழுமையாக பயன்படுத்தினார். ஆனால், எவ்வித பாதுகாப்பையும் அளிக்காமல் சென்றுவிட்டார். சசிகலாவை பார்த்து எல்லோரும் பாடம் கற்க வேண்டும்’’ என்றார்.

இவர்கள் கருத்து தொடர்பாக நேற்று, செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘சசிகலா, தினகரன் சந்தர்ப்பவாதத்தின் ஒட்டு மொத்த உருவங்கள். இவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு தமிழகத்தை சூறையாடி வளைத்து போட்டுள்ளனர். தினகரன், திவாகரனின் நாக்குகள் நயவஞ்சகத்தனமானவை. ‘சசிகலாவை ஜெயலலிதா விட்டுவிட்டார் ’ என திவாகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவை விமர்சிக்க அவர் தகுதியில்லாதவர். தினகரன் ஜெயலலிதாவை முதல் குற்றவாளி என்கிறார். இவர்களை வரலாறு மன்னிக்காது’’ என்றார்.

வெற்றிவேல் பதில்

இந்நிலையில் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியதாவது:

எந்த சூழலிலும் ஜெயலலிதாவை சசிகலாவோ, குடும்பமோ தவறாக பேசியது கிடையாது. எல்லா சூழலிலும் ஜெயலலிதாதான் எல்லாமே என்று சசிகலா இருந்தார். ஜெயக்குமார் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கோமாளித்தனமான ஆட்சி நடந்தால், ஆளுநர், பாஜக என யார் கை வேண்டுமானாலும் ஓங்கும். இந்த அரசு மக்களுக்காக செயல்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்