புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்வு

By செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழையால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய 4 ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 72 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய 4 ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகியவற்றில் அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று காலை நிலவரப்படி, 4 ஏரி களுக்கு, மொத்தமாக விநாடிக்கு 2,308 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. 35 அடி உயரமுள்ள பூண்டி ஏரி நீர்மட்டம் 21.25 அடியாகவும் (368 மில்லியன் கன அடி), 18.86 அடி உயரமுள்ள சோழவரம் ஏரி நீர்மட்டம் 6.74 அடியாகவும் (250 மி. கன அடி), 21.20 அடி உயரமுள்ள புழல் ஏரி நீர்மட்டம் 6 அடியாகவும் (747 மி. கன அடி), 24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 10.35 அடியாகவும் (749 மி. கன அடி) உள்ளது. மொத்தமாக 2,114 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 121 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

வாழ்வியல்

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்