ஓட்டுநர்களை கொன்றவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு: 4 பேருக்கு இரட்டை ஆயுள்

By செய்திப்பிரிவு

கார் ஒட்டுநர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்குகளில் முக்கிய குற்ற வாளிக்கு 3 ஆயுள் தண்ட னையும், அவரது கூட்டாளிகள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், கார் ஓட்டுநர். இவர், கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்டார். கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பி வந்து போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து பொள் ளாச்சியை சேர்ந்த மற்றொரு கார் ஓட்டுநர் ஜான் அந்தோணி சாமியை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள் ளப்பட்ட விசாரணையில், 2006-ல் கார் ஓட்டுநர் குஞ்சன் (எ) ராஜன் என்பவரையும் 2007-ல் ஜான் தாமஸ் என்ப வரையும் கடத்தி கொன்றுவிட்டு அவர் களது காரை திருடியது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 3 தனித்தனி வழக்குகளாக பிரித்து நடத்தப்பட்டு வந்தது. வழக்கை, நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் விசாரித்து வந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க் கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி, குற்றம்சாட் டப்பட்ட 10 பேரில் சின்னராஜ், அருணகிரி ஆகிய இருவர் விடுவிக்கப்பட்டனர். 8 பேரை குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். இதன்படி, முக்கிய குற்றவாளியான ஜான் அந்தோணிசாமிக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் 42 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தும் முத்துமாணிக்கம், கணேஷ்குமார், ராஜேஷ்குமார், காளீஸ்வரன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் மற்றும் 17 ஆண்டுகள் 6 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். எஞ்சிய மூவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

57 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்