தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 500 வீரர்கள்

By செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 500 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, நவ.4-ம் தேதி வரை சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போதும், கடந்த ஆண்டு வீசிய வார்தா புயலின் போதும் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது வெள்ளம் பாதித்த இடங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஏராளமானோரை காப்பாற்றினர். தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு மழை பெய்து பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக 10 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை சேர்ந்த 500 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், படகுகள், ஹெலிகாப்டர்கள், உயிர் காக்கும் கருவிகளும் தயார் நிலையில் உள்ளன’ என்றார்.

இதேபோல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அவற்றை வழங்க தயாராக உள்ளதாக இந்தியக் கடலோர காவல் படையும் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

28 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

50 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்