எந்த அமைச்சர் வந்தாலும் விடமாட்டோம்; விஷால் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு

By செய்திப்பிரிவு

அசோக்குமார் தற்கொலை விவகாரத்தின் பின்னணியில் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் உள்ளதாகத் தெரிகிறது. அன்புச்செழியனுக்கு ஆதரவாக அமைச்சரோ, எம்.எல்.ஏவோ யார் வந்தாலும் அவர்களை சும்மா விடமாட்டோம் என்று விஷால் அறிவித்தது உண்மையில்லாத கூற்று என்று அமைச்சர் ஜெயகுமார் மறுத்துள்ளார்.

இனிமேல் தமிழ் சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்களை துன்புறுத்துவதை அனுமதிக்க மாட்டோம். ரெட் கார்டை பயன்படுத்தி நிறைய கட்டப்பஞ்சாயத்து நடந்திருக்கிறது. எந்த தயாரிப்பாளருக்கும் இந்த முடிவு வரக்கூடாது வர விட மாட்டேன். இந்த வழக்கு சம்பந்தப்பட்டவருக்கு சிபாரிசாக எந்த அமைச்சர் வந்தாலும், எம்.எல்.ஏவோ, அமைச்சரோ யார் வந்தாலும் அவர்களை சும்மா விடமாட்டோம் என்று விஷால் பேட்டி அளித்திருந்தார்.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இதை மறுப்பதாகத் தெரிவித்தார்.

''விஷால் பேசியதில் அவர் கூற்றை தவிர்த்திருக்க வேண்டும். உண்மையில்லாத குற்றச்சாட்டை அவர் வைக்கிறார். அப்படி எதுவும் நடக்கவில்லை. அவரது குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. கந்து வட்டியிலிருந்து தயாரிப்பாளர்களை காத்திட திரையுலகினரே பணம் திரட்டி சுழற்சி நிதியை உருவாக்கலாமே. ரூ.500 கோடி வரை இதில் நிதியை சேமித்து தயாரிப்பாளர்களுக்கு உதவலாமே.''

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்