கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை: கமல் பாராட்டு

By செய்திப்பிரிவு

பிறப்புச் சான்றிதழ் குறித்த கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிடத் தேவையில்லை என்று அம்மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதைப் பாராட்டி கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''மீண்டும் கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை. உங்கள் சுற்றறிக்கை வரலாற்றுப்பூர்வமானது. நான் என் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிட மறுத்துவிட்டேன். என் மகள்கள் 21 வயதைக் கடந்த பிறகு ஸ்ருதி ஹாசன் இந்து மதத்தைத் தேர்வு செய்தார். அக்‌ஷரா ஹாசன் சாதி, மதம் இல்லாமல் வாழ முடிவெடுக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்