கடம் தயாரிக்கும் கலைஞர் மீனாட்சி அம்மாள் காலமானார்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 4 தலைமுறைகளாக கர்நாடக இசைக் கருவியான கடம் தயாரிக்கும் கைவினைக் கலைஞரும், குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது பெற்றவருமான மீனாட்சி அம்மாள்(75) நேற்று அதிகாலை காலமானார்.

கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், திரைப்பட இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசைக் கலைஞர்களின் இசையமைப்பில் மானாமதுரை கடத்துக்கு என முக்கிய இடமுண்டு.

குடியரசுத் தலைவர் விருது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த மீனாட்சி அம்மாளின் குடும்பம், பல தலைமுறைகளாக கடங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதில், கடங்களை தயாரிக்கும் பெண் கைவினைக் கலைஞர் என்பதால், அவரது இசை சேவையை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு விருது வழங்கி அரசு கவுரவித்தது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அவர் தேசிய விருது பெற்றார்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் மாரடைப்பு காரணமாக இவர் இறந்தார். இவரது மகன் ரமேஷ், நான்காம் தலைமுறையாக கடம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்