ஒலி, காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியை கொண்டாட வேண்டும்: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

ஒலி, காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் எழும் ஒலி, தற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசை நிரந்தரமான செவிட்டுத் தன்மையையும் ஏற் படுத்த வாய்ப்புள்ளது. ஒலி மாசை தடுக்க, இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளிக்கு முன்தினம் மற்றும் தீபாவளியன்று சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஓசூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஒலி மற்றும் காற்று மாசு அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

பொதுமக்கள் இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளைக் கண்டிப்பாக வெடிக்கக் கூடாது. மற்ற நேரங்களில் 125 டெசிபல் அளவுக்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்கி வெடிக்க வேண்டும். சில்லறை விற்பனையாளர்கள், 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது.

பட்டாசு தயாரிப்பாளர்கள், தயாரிக்கப்படும் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் மற்றும் வெடித்தால் எழும் ஒலி அளவின் விவரத்தை, பேக்கிங் செய்யப்பட்ட பெட்டி யில் குறிப்பிட வேண்டும்.

எனவே, மக்கள் அனைவரும், அவரவர் குடும்பம், நண்பர்கள், அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும், ஒலி மற்றும் காற்று மாசற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியை கொண்டாடுமாறும், ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து, வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

மேலும்