மீனவ சமூக பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ் போட்டித் தேர்வுக்கான பயிற்சி

By செய்திப்பிரிவு

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்தியக் குடிமைப் பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.

இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளதாவது:

மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் சார்பில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து தனிக் குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத் துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பப் படிவங்களை மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

வரும் 23-ம் தேதிக்குள்...

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 23-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பலாம்.

இதுகுறித்து, கூடுதல் விவரங்களுக்கு துறையின் உதவி, துணை மற்றும் இணை இயக்குநர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

க்ரைம்

10 mins ago

வணிகம்

14 mins ago

சினிமா

11 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

உலகம்

33 mins ago

வணிகம்

39 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்