ரூ.2.40 கோடியில் சீரமைத்த சாலை ஒரே மாதத்தில் சேதமடைந்தது

By செய்திப்பிரிவு

சோமங்கலம் - சேத்துப்பட்டு இணைப்பு சாலை அமைக்கப்பட்ட ஒரே மாதத்தில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பழுதடைந்ததால் மக்கள் அவதியடைந் துள்ளனர்.

குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமங்கலம் கிராமத்தையும் சேத்துப்பட்டு கிராமத்தையும் இணைக்கும் முக்கிய சாலை சோமங்கலம் சேத்துப்பட்டு இணைப்புச்சாலை. இச்சாலை கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் இச்சாலை புதுப்பிக்கப்பட்டது. இதனால் இச்சாலையை பயன் படுத்தும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், இச்சாலை சீரமைக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு உள்ளாகவே பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு பழுதடைந்துள்ளதால் இச்சாலையை பயன் படுத்தும் வாகன ஓட்டுநர்களும், மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளங்களை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள் ளனர்.

இதுகுறித்து ஒன்றிய பொறியாளர் வசுமதி கூறும்போது, “சோமங்கலம் - சேத்துப்பட்டு இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள பழுதை சீர்படுத்த ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்பட்ட பிறகு தான் நிதி வழங்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்