காஷ்மீர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு மூலம் தீர்வு காண வேண்டும்: பழ.நெடுமாறன்

By செய்திப்பிரிவு

காஷ்மீர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்தித் தீர்வு காண முன்வருவதே ஜனநாயக வழி என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காஷ்மீர் பிரச்சினையை படை வலிமை கொண்டு தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக ஓய்வு பெற்ற உளவுத்துறைத் தலைவரை சிறப்புப் பிரதிநிதியாக இந்திய அரசு நியமித்துள்ளது. ஆனால், இதன் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசமும் மீதமுள்ள பகுதி இந்தியாவிலும் உள்ளன. ஐ.நா.வில் இந்தியா மீது பாகிஸ்தான் புகார் செய்தது. அப்போதைய இந்தியத் தலைமையமைச்சர் நேரு காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி இறுதித் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார். ஐ.நா. பேரவையிலும் இந்தியப் பிரதிநிதி இந்த வாக்குறுதியை உறுதி செய்தார். அதன்படி காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தித் தீர்வு காண முன்வருவதே ஜனநாயக வழியாகும்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

வணிகம்

41 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்