அடுத்த கட்டத்தை நோக்கி அமேசான்!

By செய்திப்பிரிவு

மளிகைக் கடையில் மாதாந்திர சாமானுக்கு லிஸ்ட் கொடுத்து விட்டு, அதைக் கடைக்கார பையன் வீட்டுக்கு வந்து டெலிவரி செய்தது அந்தக் காலம். இப்போது குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒருமுறையாவது வெளியில் ஷாப்பிங் போயாக வேண்டும், அது வும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் இது கட்டாயம்.

மளிகைக் கடைகளின் மேம்பட்ட வடிவமாக வந்துள்ளதுதான் வணிக வளாகங்களில் உள்ள ரீடெய்ல் ஸ்டோர்கள். இதில் வீட்டுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். மளிகைக் கடைக்கு ஒரு தடவை யும், பிளாஸ்டிக் மற்றும் பாத்திரங் கள் வாங்க வேறொரு கடையை யும் தேடி அலைவதை மிச்சப்படுத் தியதில் இத்தகைய ஸ்டோர்களுக்கு மிகப் பெரும் பங்குண்டு.

தேவையான பொருள்களை நேரில் பார்த்து வாங்கிக் கொள்ளும் வசதி இதில் உள்ளன. இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதியும் வந்துவிட்டது. `பிக் பாஸ்கெட்’ போன்ற நிறுவனங்கள் நீங்கள் தேர்வு செய்த பொருள்களை வீட்டுக்கே டெலிவரி செய்து தருகின்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்வது நேரத்தை மிச்சப்படுத்தினாலும் நேரடியாக சென்று வாங்கும் அனு பவம் அலாதியானதுதான். இதைக் கருத்தில் கொண்டே ஆன்லைன் விற்பனையில் பல நாடுகளில் கோலோச்சும் அமேசான் நிறுவனம் விற்பனையகங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இந்த விற்பனை யகம் ஏற்கெனவே உள்ள விற்பனை யகங்களில் உள்ள சிரமங்களைப் போக்கும் வகையில் உருவாக்கத் திட்டமிட்டு முற்றிலும் அதிநுட்பமான மேம்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.

`அமேசான் கோ’

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமேசான் கோ விற்பனையகம் தொடங்கப்பட உள்ளது. இந்த விற்பனையகத்தில் எத்தகைய வசதி அளிக்கப்படும் என்பதை யூ-டியூபில் வெளியிட்டுள்ளது அமேசான்.

ஆர்டிபீஷியல் இன்டெலிஜன்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை உணர் திறன் நுட்பம் இந்த விற்பனை யகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த விற் பனையகத்திற்குள் நுழைந்தவுடன் அவர்களது செல்போனை இங்குள்ள கருவியில் பதிவு செய்துவிட்டு நுழைந்துவிடலாம். தங்களுக்குத் தேவையான பொருள்கள் அனைத் தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு சென்றுவிடலாம். பில்லுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.

இவர்கள் எந்தெந்த பொருள்கள் எடுத்துள்ளார்களோ அதற்கான விவரத்தை இவரது செல்போனில் உள்ள செயலி (ஆப்ஸ்) கணக்கிட்டு அவருக்கு பில் தொகையை அனுப்பிவிடும். அவர் அதை ஆன்லைன் மூலமே செலுத்தி விடலாம். ஒரு பொருளை எடுத்துவிட்டு அது தேவையில்லையெனில் மீண் டும் விற்பனையகத்திலேயே வைத்து விட்டால் கூட இந்த செயலி சரியாகக் கணக்கிட்டுவிடும். கூடுதலாக பில் தொகை வந்துவிடுமோ என்று கவலைப்படத் தேவையில்லை.

விற்பனையகங்களில் பொருள்களை எடுத்துவிட்டு அதை பில் போடுவதற்காக காத்திருக்கும் நேரம் அதிகம். கணவன், மனைவி இருவரும் ஷாப்பிங் சென்றால் ஒரு கட்டத்தில் பில் வரிசையில் ஒருவர் நின்று மற்றவர் பொருளை எடுத்து வரும் சூழலும் ஏற்படும். இவை அனைத் துக்கும் தீர்வு காணும் விதமாக அமேசான் கோ அமைந்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு இப்போதே அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் காசாளரின் வேலை பறிபோகும் என பலரும் எதிர்க்கின்றனர். கம்ப்யூட்டர் அதைத் தொடர்ந்து ரோபோக்கள் வருகையும் எதிர்ப்புக் கிடையேதான் உருவாகின. அவசர யுகத்தில் அமேசான் கோ-வும் எதிர்ப்பையும் மீறி வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

தமிழகம்

28 mins ago

க்ரைம்

35 mins ago

வணிகம்

39 mins ago

சினிமா

36 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

உலகம்

58 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்