டிப்ஸ்: காரை பராமரிப்பது எப்படி?

By செய்திப்பிரிவு

l பெரும்பாலானோர் தாங்கள் பயன்படுத்தும் கார்களை உரிய காலத்தில் சர்வீஸ் செய்யமாட்டார்கள். இதனால் பல பிரச்சினைகள் உருவாகின்றன.

l குறித்த கால நிர்வாகம் (periodic maintenance) காருக்கு அவசியம். 5 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடியிருந்தால் அதை பொதுவான சோதனை செய்து அவசியம். இதனால் காரின் செயல் திறன் தொடர்ந்து சீராக இருக்கும்.

l குறித்த காலத்தில் காரை தொடர்ந்து கவனிப்பதால் இன்ஜினின் தேய்மானம் அதிகரிக்காமல், சப்தம் இல்லாமல் இயங்கும். கூடுதல் மைலேஜ் கிடைக்கும்.

l பிரேக்கின் செயல் திறனை சோதனை செய்வதால் அதன் செயல்பாடு தொடர்ந்து நன்றாக இருக்கும். இதனால் விபத்திலிருந்து காத்துக் கொள்ள முடியும்.

l காரின் கூலிங் சிஸ்டத்தை பரிசோதிப்பதால் இன்ஜின் வெப்பமடைவது தவிர்க்கப்படும். இதனால் இன்ஜினின் செயல் திறன் மேம்படும்.

l காரின் சஸ்பென்ஷனை சோதிப்பது மூலம், சாலையில் அதிர்வில்லாமல் பயணிக்கலாம். இது கார் ஓட்டுவதிலும் பயணிப்பதிலும் சுகமான அனுபவத்தை அளிக்கும்.

l ஏசி சிஸ்டத்தை மெயின்டெய்ன் செய்வதால் பயணத்தின்போது சிறந்த குளிர்ச்சியை உணர முடியும்.

தகவல் உதவி

கே.ஸ்ரீனிவாசன்,

தலைமை பொதுமேலாளர் டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்