மசெராட்டியின் 3 புதிய அறிமுகங்கள்

By செய்திப்பிரிவு

நூற்றாண்டு பழமைமிக்க இத்தாலிய பிராண்டான மசெராட்டி, கடந்த வாரம் அதன் மூன்று புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிப்லி கிரான்ஸ்போர்ட், லெவண்டே கிரான்லூசோ மற்றும் குவாட்ரோபோர்ட் கிரான்ஸ்போர்ட். கிப்லி, 423.7 ஹார்ஸ் பவரை 5750 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யும் 2979 சிசி இன்ஜினைக் கொண்டிருக்கிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரக்கூடியது. இதன் விற்பனையக விலை ரூ.1.44 கோடி முதல் ஆரம்பமாகிறது.

லெவண்டே கிரான்லூசோ, 270.88 ஹார்ஸ்பவரை 4000 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யும் 2987 சிசி இன்ஜினை கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் லிட்டருக்கு 12 கிமீ மைலேஜ் தரும். விலை ரூ.1.53 கோடி முதல் ஆரம்பமாகிறது.

குவாட்ரோபோர்ட் கிரான்ஸ்போர்ட், 571 ஹார்ஸ் பவரை 6800 ஆர்பிஎம்-ல் உற்பத்தி செய்யும் 2999 சிசி இன்ஜினைக் கொண்டிருக்கிறது. டீசல் இன்ஜின் மாடலான இது, லிட்டருக்கு 12 கிமீ மைலேஜ் தரக் கூடியது. விலை ரூ.1.73 கோடி முதல் ஆரம்பம். இந்த மூன்று மாடல்களும் 5 பேர் அமரும் அளவுக்கு இருக்கை வசதியைக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

47 mins ago

க்ரைம்

53 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்