எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ஹூண்டாய் கிரெடா

By எம்.ரமேஷ்

ஆட்டோமொபைல் துறையில் ஒரு நிறுவனத்தைவிட மற்றொரு நிறுவனத் தயாரிப்பு ஏதாவது ஒரு வகையில் சிறப்பானதாக அமைந்து விடுகிறது. அதுவே அந்த தயாரிப்பு பிரபலமாகக் காரணமாகிறது.

சமீப காலமாக இந்திய சாலைகளில் கார்களின் வரவு அதிகமாகவே உள்ளது. இந்திய நிறுவனங்களுக்குப் போட்டியாக பன்னாட்டு நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியபடி உள்ளன.

போட்டி நிறைந்துவிட்ட இந்த கார் சந்தையில் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே நிறுவனங்கள் புதிது புதிதாக கார்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கிரெடா மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல் கார் இம்மாதம் 21-ம் தேதி டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2012-ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் இது காட்சிக்கு வைக் கப்பட்டபோதே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ரூ. 1,000 கோடி முதலீடு

இந்த கார் வடிவமைப்பு முற்றிலும் தாய் நிறுவனமான கொரியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகை யிலான மாற்றங்களை ஹைதரா பாத் மற்றும் சென்னையில் உள்ள ஹூண்டாய் நிபுணர்கள் மாற்றம் செய்து உருவாக்கியுள்ளனர். இந்தியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் உருவாக்கத்தில் 100 பொறியாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

பல நிறுவன எஸ்யுவி-க்களின் செயல்பாடுகளை ஆராய்ந்த பிறகு இது உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்யுவி வைத்துள்ள 900 பேரிடம் இது தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் இது உருவாக் கப்பட்டுள்ளது.

காம்பாக்ட் எஸ்யுவி எனப்படும் ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வகை கார்கள் தயாரிப்பில் ஹூண்டாய் இதுவரை ஈடுபட்டது கிடையாது. இதற்காக ரூ.1,000 கோடியை முதலீடு செய்துள்ளது இந்நிறுவனம். ஏற்கெனவே எஸ்யுவி பிரிவில் இந்நிறுவனம் ஃபான்டா எப்இ எனும் காரை சந்தைப்படுத்தியுள்ளது.

கிரெடாய் நிச்சயமாக ஃபோர்டு நிறுவனத்தின் எகோ ஸ்போர்ட், மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் ஸ்கார் பியோ, ரெனால்ட் டஸ்டர், நிசான் டெரானோ, டாடா சஃபாரி ஸ்டோர்ம் ஆகிய மாடல்களுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் என்கிறார்கள் சந்தை வல்லு நர்கள்.

அறிமுக நாளில் காரின் விலையை இந்நிறுவனம் அறிவிக்க உள்ளது. இது ரூ.8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடிவமைப்பு

ஹைவ் ஸ்டிரக்சர் எனப்படும் வடிவமைப்பில் இது உருவாக்கப்பட் டுள்ளது. இலகு ரக அதே சமயம் உறுதி யான தகடுகளால் இதன் கட்டமைப்பு அமைந்துள்ளதால் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிரெடா காரின் வெளிப்புற கட்டமைப்பு இந்தப் பிரிவில் மிக அதிக வலுவுள்ளதாக இருக்கும் என தெரிகிறது. இதில் உள்ள வளைய வடிவிலான பிரேம்கள் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பை உறுதி செய்வதாக உள்ளது.

ஒவ்வொரு தூணும் அதாவது மைய தூண் மற்றும் அனைத்து தூண்களும் வட்ட வடிவத்தை சுற்றி அமைந்துள் ளதைப் போல வடிவமைக்கப்பட் டுள்ளது. இது ஒரு வலுவான கூட்டைப் போன்று அமைந்துள்ளது.

அத்துடன் இதில் சவாரி செய்வது மிகுந்த சுகானுபவமாக இருக்கும் என்று வடிவமைப் பாளர்கள் நம்புகின்றனர். எத்தகைய சாலைகளிலும் ஸ்திரமாக செல்வ தோடு நீண்டகாலம் உறுதியாக உழைக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.

இன்ஜின்

இதில் அதிக சக்திவாய்ந்த 1.6 டியூயல் விடிவிடி மற்றும் யு2 1.4 சிஆர்டிஐ மற்றும் யு2 1.6 சிஆர்டிஐ விஜிடி டீசல் இன்ஜின் உள்ளது. இது மிகச் சிறந்த செயலாற்றல் புரிவதோடு மிகுந்த எரிபொருள் சிக்கனமானதும் கூட. இதில் 6 ஸ்பீடு கியர் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியோடு வந்துள்ளது.

ஜூனில் உற்பத்தி

புதிய ரக கிரெடாவை ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் முதல் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து 700 விநியோகஸ்தர்களிடமும் இந்த கார் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

4.65 லட்சம்

கிரெடா அறிமுகம் மூலம் ஹூண்டாய் நடப்பாண்டில் 14 சதவீத வளர்ச்சியை எட்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்த ஆண்டில் 4.65 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள், இது பற்றி அறிந்துகொள்ள ஆர்வ மாயிருப்பவர்கள் ஆகியோரது பட்டியலைப் பார்க்கும் போது நிறுவனம் நிர்ணயித்த இலக்கை எட்டிவிடும் என்றே தோன்றுகிறது.

2.5 லட்சம் கி.மீ. சோதனை ஓட்டம்

அறிமுகத்துக்கு முன்பாக 2.5 லட்சம் கிலோ மீட்டர் தூரம் இது ஓட்டிப் பார்க்கப்பட்டுள்ளது.

முதல் நாளில்...

அறிமுகம் செய்யும் ஜூலை 21-ம் தேதி மட்டும் 10 ஆயிரம் சோதனை ஓட்டங்களுக்கு (டெஸ்ட் டிரைவ்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

8,000 கி.மீ பயணம்

நாடு முழுவதும் மொத்தம் 8 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ஓட்டிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7,000 மெக்கானிக்

நாடு முழுவதும் 700 நகரங்களில் புதிய கிரெடாவைப் பற்றி அறிந்த 7 ஆயிரம் மெக்கானிக்குகள் உள்ளனர்.

4,000 விற்பனையாளர்கள்

கிரெடா பற்றி விளக்கம் அளிக்கவும், தகவல்களை தரவும் 4 ஆயிரம் பயிற்சி பெற்ற விற்பனை பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

10,000 பேர் முன் பதிவு

இந்தக் காருக்கு இதுவரை 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தக் காரைப் பற்றிய விவரத்தை 28,500 பேர் கேட்டுள்ளனர். இந்தக் காருக்கான முன் பதிவு தொடங்கிய ஒரு வாரத்தில் 8 ஆயிரம் பேர் காருக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை எந்த ஒரு ஹூண்டாய் தயாரிப்புக்கும் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலானோர் முன் பதிவு செய்தது கிடையாது.

சிறப்பம்சங்கள்

17 அங்குல டயமண்ட் கட் அலாய் வீல்ஸ்

புரொஜெக்டர் ஹெட்லேம்ப்

எல்இடி பொசிஷனிங் லேம்ப்

ஸ்டேடிக் பெண்டிங்

லெதர் சீட்

ஷார்க் ஃபின் ஆன்டெனா

உயர் சிறப்பம்சங்கள்

ஆடியோ, வீடியோ நேவிகேஷன்

5 அங்குல தொடுதிரை ஆடியோ சிஸ்டம்

சூப்பர் விஷன் கிளஸ்டர்

ஸ்மார்ட் சாவி, புஷ் பட்டன் வசதியோடு

சவுகரியங்கள்

கிளஸ்டர் அயோனைஸருடன் எப்ஏடிசி

எலெக்ட்ரிக் ஃபோல்டிங் ஓஆர்விஎம்

பின்புற ஏசி வென்ட்

ஸ்டீரிங் உயரத்தை மாற்றும் வசதி

1 ஜிபி இன்டர்னல் நினைவகம்

பாதுகாப்பு அம்சங்கள்

பக்கவாட்டு மற்றும் முன் பக்க ஏர் பேக்

ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்

ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா

எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கன்ட்ரோல்

வெகிகிள் ஸ்டெபிலிட்டி நிர்வாகம்

மலைப்பகுதிகளில் ஓட்ட உதவும் வசதி

பல நிறுவன எஸ்யுவி-க்களின் செயல்பாடுகளை ஆராய்ந்த பிறகு இது உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்யுவி வைத்துள்ள 900 பேரிடம் இது தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ramesh.m@thehindutamil.co.i

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

விளையாட்டு

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்