அறம் செய்ய விரும்பு

By இராம.சீனுவாசன்

ஒவ்வொருவர் வாழ்விலும் கொடுப்பதும் பெறுவதும் நிகழாமல் இருப்பதில்லை. நாம் உயர்ந்த சமூக-பொருளாதார நிலையில் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் மற்றவரிடமிருந்து பெறுவது நடந்தே தீரும்; எவ்வளவு வறுமையில் இருந்தாலும் கொடுப்பதும் நடந்தே தீரும். எனவே அறம் செய்வது ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாததாக இருக்கிறது.

முன்னிலையில் பாகிஸ்தான்

தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் 141-வது இடத்திலும், மனித வளர்ச்சி குறியீட்டில் 130-வது இடத்திலும் இருக்கும் இந்தியா, கொடுக்கும் குறியீட்டில் (Giving Index) உலகில் 69-வது இடத்தில் இருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவிற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தான் 61, நேபாளம் 44, வங்கதேசம் 72-வது இடங்களில் உள்ளன. Charity Aid Foundation என்ற பிரிட்டிஷ் நிறுவனமும் Gallup World Poll என்ற நிறுவனமும் இணைத்து வருடம் தோறும் நடத்தும் கருத்து கணிப்பில் இந்த விவரங்கள் தெரிய வருகிறது.

Charity (கொடை) philanthrophy (கொடை யாண்மை) இந்த இரண்டு சொற்களுக்கும் ஒரு பெரிய வேறுபாட்டைச் சொல்கின்றனர். ஒருவருக்கு பணம் அளிப்பது கொடை, ஆனால் அவர் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்குவது கொடையாண்மை. இன்று கொடையைவிட கொடையாண்மையில் மக்களின் கவனம் அதிகமாக உள்ளது.

எனவே “உலக கொடுக்கும் குறியீட்டை” (World Giving Index) உருவாக்க மக்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. கொடையாக பணம் அளித்தது உண்டா? ஏதாவது ஒரு அமைப்புக்கு உங்கள் உழைப்பை தந்ததுண்டா? உங்களுக்கு பரிச்சயம் இல்லாத, உதவி தேவைப்படும் ஒருவருக்கு உதவியது உண்டா? இந்த மூன்று கேள்விகளும் கொடையைவிட கொடையாண்மையை அதிகம் வலியுறுத்துகின்றன.

அனைவரின் கடமை

மதத்தின் காரணமாக சமூக எதிர் பார்ப்புக்காக பல நேரங்களில் நாம் செய்யும் கொடை, விரையமாகாமல் இருப்பதும், அதே நேரத்தில் அடுத்தவர் தேவையை அறிந்து உதவுவதும் மிக முக்கியம் என்பதை எல்லோரும் வலியுறுத் துகின்றனர். கொடை என்பது ஒரு கடமை, கொடையாண்மை என்பது புரிதல், அடுத்தவர் தேவையை புரிந்து அவர்கள் வாழ்வில் பங்குகொள்வது.

இயற்கை சீற்றங்களும் உள்நாட்டு போரும் ஒரு நாட்டில் கொடையாண்மையை அதிகரிக்கின்றன. 2013-ல் கொடுக்கும் குறியீட்டில் 71 இடத்தில் இருந்த மலேசியா, 2014-ல் 7ஆம் இடத்தை பிடித்தது. இதற்கு முக்கியக் காரணம் Philippine தீபகற்பத்தை பாதித்த Typhoon Haiyan என்ற சூறாவளிக்கு பிறகு Philippine நாட்டுக்கு மலேசிய மக்கள் செய்த உதவி பெரிது.

தொடர் நடவடிக்கை

இது போன்று உலகம் எங்கும் இயற்கை சீற்றங்கள் கொடையாண்மையை உயர்த் துகிறது. இதேபோல் இலங்கையில் உள்நாட்டு போருக்கு பிறகு கொடை யாண்மை அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளிலும் இந்த போக்கினை பார்க்க முடிகிறது.

ஆனால், இயற்கை சீற்றம் தணிந்த பிறகும், உள்நாட்டு போர் முடிந்த பிறகு, கொடையாண்மையை தொடர்ந்து செய்வதில்லை. எல்லா நாடுகளிலும் உதவி வேண்டுவோர் இருந்துகொண்டேதான் இருப்பர், அல்லது வேறு நாடுகளில் அந்த உதவி தேவைப்படும் நிலை இருந்தே தீரும். எனவே கொடையாண்மை என்பது தொடர்ச்சியாக இருக்கவேண்டிய ஒன்று என்பதையும் இந்த அறிக்கை கூறுகிறது.

குறிப்பிட்ட துறைகளுக்கு…

Dasra என்ற கொடையாண்மை பற்றிய தொண்டு நிறுவனத்துக்காக Bain & Company என்ற நிறுவனம் வருடம் தோறும் இந்தியாவில் கொடையாண்மை தொடர்பாக அறிக்கை வெளியிடுகிறது. இந்த வருடமும் India Philanthrophy Report 2015 அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில் கொடை அளிப்போருக்கும் அதனை பயன்படுத்தும் அரசு அல்லாத நிறுவனங்களுக்கும் (NGO) உள்ள தொடர்பினை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொடை அளிப்போர் எண்ணிக்கையும், கொடையின் அளவும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்கள் சமுதாய பொறுப்பு செலவுகளுக்காக தங்கள் இலாபத்தில் 2 சதவீதமாவது செலவு செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம். அதே நேரத்தில் கொடையின் பெரும் பகுதி ஒரு சில துறைக்கே செல்வதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

கல்வி, குழந்தை நலம், முதியோர் நலம், ஊனமுற்றோர் நலம், பேரிடர் உதவி (Disaster Relief), பொது சுகாதாரம், ஆகிய துறைகளே அதிக கொடை பெறுகின்றன. சுற்று சூழல், கலை மற்றும் பண்பாடு, திருநங்கைகள், விளிம்பு நிலை மக்கள் என்ற வேறு பல கவனிக்கப்படாத துறைகளும் உள்ளன. பரந்துபட்ட பல துறைகளுக்கு கொடை சென்றடைய வேண்டும்.

என்ஜிஓ-க்களின் பங்களிப்பு

கொடையாளிக்கும் என்ஜிஓ-க் களுக்கும் உள்ள தொடர்பு இதற்கு ஒரு முக்கிய காரணம். பெரிய கொடையாளிகள் தாங்கள் கொடுக்கும் பெரும் அளவு பணம் சரியான மாற்றத்தை ஏற்படுத்து கிறதா என்பதை உறுதி செய்ய முயல் கின்றனர். பெரிய என்ஜிஓ-க்கள் தாங்கள் செய்யும் சேவைகளின் வெளிப்பாட்டை சரியாக அளவிட்டு தெரியப்படுத்துவதால், அத்தகைய பெரிய என்ஜிஓ-க்களிடமே நிறுவனங்களும், பெரிய கொடையாளிகளும் தங்கள் பணத்தை அளிக்கின்றனர். பெரிய தொழில் நிறுவனங்களும் பெரிய என்ஜி ஓ-க்களும் இணைந்து செயல்படும் போது, அவர்களிடையே நிறுவன செயல்பாட்டு மேலாண்மையும் அதிகரித்து, தொண்டின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது.

சிறிய என்ஜிஓ-க்கள் தங்கள் செலவு களை குறைத்து, பயனாளிகளுக்கு அதிக பணத்தின் பயன்பாடு சென்றடைவதை உறுதி செய்ய முயல்கின்றன. இத னால், அந்நிறுவனங்கள் தங்கள் செயல் பாட்டின் தாக்கத்தை அளவிட்டு கூற முடியாததாலும், தங்களின் மேலாண்மை முறையை மேம்படுத்த முடியாததாலும், அவை தங்கள் தேவைக்கு பெரிய கொடை யாளிகளை அணுக முடியாமலே போகிறது.

பாகுபாடு

பெரிய கொடையாளிகள் பெரிய என்ஜிஓ-க்கள் ஒரு குழுவாகவும், சிறிய கொடையாளிகள் சிறிய என்ஜிஓ-க்கள் மற்றொரு குழுவாகவும், செயல்படுவதால், கொடையாண்மையின் வீச்சை குறைத்து விடுன்றன. எனவே, இந்த பாகுபாடு உடைக்கப்பட வேண்டும்.

உதாரணமாக ரம்ஜான் காலத்தில் இஸ்லாமிய சமுதாயத்தின் கொடையின் அளவு அதிகம். கடந்த வருடம் இங்கிலாந்து நாட்டில் மட்டும் அந்த நேரத்தில் 100 மில்லியன் பவுண்ட் கொடை நடந்ததாக தெரிகிறது. பலரின் சிறு கொடைகளை ஒன்று திரட்டி பெரிய கொடையான்மையை உருவாக்க சில என்ஜிஓ-க்கள் முயல் கின்றன. இந்தியாவிலும் இது போன்ற முயற்சி தேவை.

மத நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாட்டு தளங்களுக்கு, மடங்களுக்கு கொடுக்கப்படும் காணிக்கைகள் கொடை யாகக் கருத முடியுமா?

அவை யாருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு விடை காணாமல் இந்த காணிக்கைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் இதுவும் யோசிக்க வேண்டிய ஒன்றுதான். ஆடம்பரமான வாழ்க்கையை தவிர்த்து கொடையை உயர்த்திச் சொல்லும் மதங்கள் ஆடம்பரமான வழிபாட்டு தளங்களை எதிர்பார்ப்பதில்லை. எனவே காணிக்கைகள் கொடைகளாகவும், வழிபாட்டு தளங்கள் கொடையாண்மையை உயர்த்துவதாகவும் இருக்கவேண்டும்.

இந்தியாவில் கொடை அளிப்போர் எண்ணிக்கையும், கொடையின் அளவும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்கள் சமுதாய பொறுப்பு செலவுகளுக்காக தங்கள் இலாபத்தில் 2 சதவீதமாவது செலவு செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம்.

seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்