பேட்டரி கார் தயாரிப்பில் இறங்குகிறது வால்வோ

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் இப்போது சுற்றுச் சூழல் பாதுகாப்பு வாகனங்களைத் தயாரிப்பதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிர ஆர்வம் காட்டுகின்றன. புகை கட்டுப்பாட்டு சோதனைகள் கடுமையாகி வரும் அதேவேளையில், பேட்டரி கார்கள் உற்பத்தியில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங் களும் கவனம் செலுத்தத் தொடங்கி யுள்ளன. ஸ்வீடனைச் சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான வால்வோ, பேட்டரி கார் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளது.

அடுத்த 8 ஆண்டுகளில் அதாவது 2025-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேட்டரி கார்களை தயாரித்து விற்க இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக சீனாவில் உள்ள ஆலையில் பேட்டரியால் இயங்கும் கார்களை தயாரிக்க இந்நிறு வனம் முடிவு செய்துள்ளது. ஷாங்காயில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்நிறுவனத்தின் பேட்டரி கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இப்புதிய ரக பேட்டரி கார் வால்வோவின் காம்பாக்ட் மாடுலர் ஆர்கிடெக்சர் (சிஎம்ஏ) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்களை சீனாவில் தயாரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வால்வோ நிறுவனத்தின் பேட்டரி கார் உற்பத்தியில் சீனா பெரும் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவன பேட்டரி கார்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாகவும் இது அமையும் என்று நிறுவனம் நம்புகிறது.

சீன அரசு புகையில்லா வாகன போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்துள்ளது. அத்திட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில் பேட்டரி கார்களை சீன ஆலையில் தயாரிக்க வால்வோ முடிவு செய்துள்ளதாக வால்வோ கார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹகேன் சாமுவேல்சன் கூறினார்.

பேட்டரி கார்களுக்கு மிகப் பெரிய சந்தையாக சீனா திகழும். இந்த சந்தர்ப்பத்தில் அத்தகைய சந்தையில் தங்கள் நிறுவனமும் பேட்டரி கார்களை அங்கு தயாரிப்பதே உத்தி சார் அடிப்படையில் சிறப்பானதாக இருக்கும் என வால்வோ கருதுகிறது. சீனாவில் ஏற்படும் வாகன நெரிசல் அதனால் ஏற்படும் புகை மாசு இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பேட்டரி கார் சிறந்த தீர்வாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் ஒரு புதிய மாடல் பேட்டரி காரை அறிமுகப்படுத்த வால்வோ திட்டமிட்டுள்ளது. நிறுவனத் துக்கு சீனாவில் மூன்று ஆலைகள் உள்ளன. டாகிங் ஆலையில இந்நிறுவனத்தின் 90 சீரிஸ் கார்களும், செங்டு ஆலையில் 60 சீரிஸ் வாகனங்களும், லுகேயோ ஆலையில் 40 சீரிஸ் வாகனங்களும் தயாராகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்