வெற்றி மொழி: கால்வின் கூலிட்ஜ்

By செய்திப்பிரிவு

1872ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த கால்வின் கூலிட்ஜ் அமெரிக்காவின் முப்பதாவது அதிபராக 1923 முதல் 1929 வரை பதவி வகித்தவர். மேலும், துணை அதிபர், மாகாண கவர்னர் மற்றும் வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற பாஸ்டன் காவல்துறையினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது இவர் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை இவருக்கு புகழையும் தேசிய கவனத்தையும் பெற்றுத்தந்தது. அமைதியான மனப்பான்மை உடையவராகவும், நேர்மையான மனிதராகவும் இருந்துள்ளார், அதேசமயம் பழமைவாதியாகவும் அறியப்பட்டுள்ளார்.

# அறிவு வருகிறது, ஆனால் ஞானம் நிலைத்து நிற்கின்றது.

# முயற்சி இல்லாமல் உடல் சார்ந்தோ அல்லது அறிவு சார்ந்தோ எவ்வித வளர்ச்சியும் இல்லை.

# சரியான விஷயங்களை செய்வதற்கு எவ்வித தந்திரமும் ஒருபோதும் தேவையில்லை.

# நான் சொல்லாத வார்த்தைகளினால் நான் ஒருபோதும் காயப்படுவதில்லை.

# நீங்கள் சொல்லாத ஒன்றிற்கு நீங்கள் விளக்கமளிக்க வேண்டியதில்லை.

# வாய்ப்புகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அதன் முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டும்.

# அனைத்து முன்னேற்றமும் செயல்பாட்டினைப் பொருத்தே அமைகின்றது.

# உறுதிப் பாட்டின் இடத்தை இந்த உலகில் வேறு எதுவும் பிடித்துவிட முடியாது.

# நமது உயர்ந்த நம்பிக்கையானது நல்லவற்றை உருவாக்குவதில் இருக்கின்றது.

# பெற்றுக் கொண்டதற்காக எவரும் எப்போதும் கௌரவிக்கப் படுவதில்லை. கொடுத்ததற்கான வெகுமதியே கௌரவம்.

# முற்றிலும் அவசியமானதை விட அதிக வரிகளை வசூலித்தல் என்பது சட்டப்பூர்வமாக்கப்பட்ட கொள்ளை.

# நீங்கள் எதையும் சொல்லவில்லை என்றால், அதை மீண்டும் சொல்வதற்கு அழைக்கப்பட மாட்டீர்கள்.

# முயற்சிக்கும் வரை, உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை ஒருபோதும் உங்களால் சொல்ல முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்