பலெனோவின் புதிய பெயர் ‘கிளான்சா’

By செய்திப்பிரிவு

மாருதி சுசூகி-டொயோடா ஆகிய இரண்டு ஆட்டொமொபைல் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து தங்களுடைய வாகனங்களைப் பரிமாறிக்கொள்ள முடிவு செய்த நிலையில், முதல்கட்டமாக மாருதியின் பலெனோ டொயோடாவுக்கு கைமாறியுள்ளது.

ஆனால் இந்தப் புதிய பலெனோ ‘கிளான்சா’ என்ற பெயரில் மாருதி பலெனோவைக் காட்டிலும் கூடுதல் கிளாமருடன் வருகிறது. 364 ‘கிளான்சா’ பலெனோக்களை டொயோடா நிறுவனத்துக்கு மாருதி சுசூகி வழங்கியுள்ளது.

இந்த ‘கிளான்சா’ மாடலின் டீசர் வீடியோவிலேயே வாகனப் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது டொயோடா. கிளான்சா அப்படியே மாருதியின் பலெனோ போலவே இருந்தாலும், அதில் சில மாற்றங்களை மட்டும் டொயோடா செய்ய உள்ளது.

முன்பக்கத்தில் இரண்டு ஸ்லாட் குரோம் கிரில், பின்பக்கத்தில் புதிய டெயில்கேட் ஆகியவைப் புதிதாக உள்ளன. உட்புறத்தில் டேஷ்போர்டில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மற்றபடி அனைத்துமே பலெனோவில் இருப்பதுதான்.

கிளான்சா இரண்டு வேரியன்ட்களில் வர உள்ளது. ஆனால், இரண்டுமே பெட்ரோல் இன்ஜின் தான். டீசல் ஆப்ஷன் கிளான்சாவில் இல்லை. இதன் மூலம் கிளான்சா தனிநபர் பயன்பாட்டுக்கானது என்பது தெளிவாகிறது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் சிவிடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ் 6 தர நிர்ணய விதிமுறைகளின்படி தயாரிக்கப்பட உள்ளது.

ஆனால், கிளான்சாவில் புதிய பலெனொவில் உள்ள டூயல்ஜெட் யூனிட் இருக்குமா அல்லது முந்தைய பலெனோ, ஸ்விஃப்ட், டிசையர் போன்றவற்றில் உள்ள யூனிட் இருக்குமா என்பது தெளிவில்லாமல் உள்ளது. கிளான்சா ஜூன் மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. கிளான்சா மாருதி பலெனோவைக் காட்டிலும் சற்று கூடுதல் விலையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

பலெனோவை தொடர்ந்து எதிர்காலத்தில் மாருதி சுசூகி தனது காம்பேக்ட் எஸ்யுவியான விடாரா பிரஸ்ஸா, செடான் சியாஸ், எம்பிவி எர்டிகா  ஆகியவற்றையும் டொயோடாவுக்கு வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் டொயோடாவின் புதிய காம்பேக்ட் எம்பிவி மாருதி சுசூகிக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் இரண்டு நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்