வெற்றி மொழி: பி. டி. பர்னம்

By செய்திப்பிரிவு

1810-ம் ஆண்டு முதல் 1891-ம் ஆண்டு வரை வாழ்ந்த பி. டி. பர்னம் அமெரிக்காவைச் சேர்ந்த பொழுதுபோக்கு கலைஞர், அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர். மேலும் இவர் எழுத்தாளர், பதிப்பாளர் மற்றும் கொடையாளரும் கூட. பர்னம் அண்ட் பெய்லி சர்க்கஸின் உருவாக்கத்திற்காக பெரிதும் நினைவுகூரப்படுகிறார். தனது வாழ்வின் ஆரம்ப காலக்கட்டத்திலேயே வார இதழ், லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பல வணிகங்களை நடத்தி வந்தார். உலகின் மிகச்சிறந்த தனது சர்க்கஸ் நிறுவனத்தின் மூலமாக மில்லியன் கணக்கான மக்களை மகிழ்வித்தவர். அமெரிக்க வரலாற்றில் செல்வாக்கு மிக்க நூறு நபர்களுக்கான பட்டியலில் 67-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

# என்னை பொறுத்தவரை புன்னகை, பிரகாசமான கண்கள், மகிழ்ச்சியான குழந்தைகள் போன்ற அழகான ஓவியம் வேறு எதுவுமில்லை.

# நல்ல ஆரோக்கியமே வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம்; இதுவே மகிழ்ச்சியின் அடிப்படையும் கூட.

# மனிதகுலத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் குறிப்பிடத்தக்க வெளிப்பாடு இலக்கியம்.

# அதிர்ஷ்டம் எப்பொழுதும் துணிச்சலை விரும்புகிறது, தன்னைத்தானே ஆதரிக்காத ஒருவருக்கு அது ஒருபோதும் உதவுவதில்லை.

# வணிகத்தில் மரியாதை மற்றும் நாகரிகம் ஆகியவை எப்போதும் சிறந்த முதலீடாக உள்ளது.

# நீங்கள் எதைச் செய்தாலும், அதை உங்கள் முழு சக்தியுடன் செய்யுங்கள்.

# பணம் ஒரு மிகச்சிறந்த வேலைக்காரன், ஆனால் ஒரு கொடூரமான எஜமான்.

# தூய்மையான சத்தியத்தை தேடுவதும், அதை ஒழுங்கமைப்பதுமே விஞ்ஞானம் ஆகும்.

# நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும்போது, ஒரு நபரால் சிறந்ததொரு அதிர்ஷ்டத்தைப் பெறமுடியாது.

# அதிர்ஷ்டத்தைப் போன்றதொரு விஷயம் இந்த உலகத்தில் வேறு எதுவுமில்லை.

# மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே மிகச்சிறந்த கலை.

# எச்சரிக்கையாகவும் அதேசமயம் தைரியமாகவும் இருங்கள்.

# கடனைப் போன்று ஒரு நபரை தோல்வியை நோக்கி இழுத்துச்செல்லும் விஷயம் வேறு எதுவுமில்லை.

# சுகம் என்பது முன்னேற்றத்தின் எதிரி.

# ஒரு மாயையை அம்பலப்படுத்துவது என்பது உண்மையை வெளிப்படுத்துவது போன்றது அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்