டுகாடி மான்ஸ்டர் அறிமுகம்

By செய்திப்பிரிவு

டு

காடி இந்தியா நிறுவனம் தனது புதிய மாடலான மான்ஸ்டர் 821 ரக மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய அறிமுகம் மூலம் 25 ஆண்டுகளாக கம்பீரமாக வலம் வந்த முந்தைய மாடலான மான்ஸ்டர் 900 ரக மோட்டார் சைக்கிளுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது.

முழுவதும் மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோட் டேங்க், அழகுற வடிவமைக்கப்பட்ட சைலன்ஸர், முகப்பு விளக்கு இந்த மோட்டார் சைக்கிளுக்கு கம்பீரத்தையும் அழகையும் சேர்த்துள்ளது.

இரட்டை சிலிண்டர் இன்ஜினைக் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் 109 ஹெச்பி திறனுடன் 9,250 ஆர்பிஎம் உந்துவிசையை வெளிப்படுத்தக்கூடியது. 43 மி.மீ. ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் அப்சார்பர், இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை இதில் உள்ள சிறப்பம்சங்களாகும். அலாய்வீல், ட்வின் டிஸ்க் பிரேக் உள்ளது. ஓட்டுபவரின் பாதுகாப்புக்காக ஏபிஎஸ் மற்றும் டிடிசி வசதி உள்ளது. இதன் விலை ரூ. 9.51 லட்சமாகும்.

இத்தாலிய தயாரிப்பான டுகாட்டி மோட்டார் சைக்கிள் பல இளைஞர்களின் கனவு பைக்காகும். இதுபோன்ற சூப்பர் பைக்குகள் சுலப தவணைகளில் கிடைப்பதால் இது பலருக்கும் கைகூடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்