புதிய மாற்றங்களுடன் ஹூண்டாய் கிரெடா!

By செய்திப்பிரிவு

ஹூ

ண்டாய் நிறுவனம் தனது எஸ்யுவி மாடலான கிரெடாவில் பல்வேறு மாற்றங்களுடன் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ 9.43 லட்சமாகும்.

2015-ம் ஆண்டில் கிரெடா அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து எஸ்யுவி பிரிவில் மிகவும் பிரபலமான மாடலாக இது திகழ்கிறது. நீண்ட காலமாக எஸ்யுவி பிரிவில் நுழையாமல் இருந்த ஹூண்டாய் நிறுவனத்துக்கு கிரெடாவின் அறிமுகம் மிகச் சிறப்பாக அமைந்தது. இதன் பிரீமிய தோற்றம், உள்புறம் தாராளமான இட வசதி, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆகியன இந்த காரை மேலும் பிரபலமாக்கியது.

கிரெடாவுக்கு சர்வதேச அளவில் 4 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதிலிருந்தே இந்த காருக்குக் கிடைத்த வரவேற்பைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார் நிறுவனத்தின் தலைமை இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய்.கே. கூ.

2018-ல் அறிமுகமாகியுள்ள மேம்படுத்தப்பட்ட இந்த ரகம் எஸ்யுவி பிரிவில் புதிய செயல் திறனை வகுக்கும். முன்பகுதி பம்பர் மிகப் பெரிய குரோம் கிரில்லை கொண்டிருக்கிறது. அதேபோல முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகளின் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நிற வண்ணத்தை தேர்வு செய்யும் வசதி மற்றும் இரட்டை ஏர் பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் ஆகிய வசதிகள் அனைத்து கார்களிலும் உள்ளன. கிரெடா கார் மற்ற எஸ்யுவி கார்களைப் போலவே மாதம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கார்கள் வரை விற்பனையாகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

வணிகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்