டிரைவர் தேவைப்படாத கார் ஆராய்ச்சியில் இறங்குகிறது அலிபாபா!

By செய்திப்பிரிவு

ன்லைன் விற்பனை நிறுவனமான சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனம் தற்போது ஆளில்லா கார் தயாரிப்புக்கான ஆராய்ச்சியில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் இறங்குவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அந்நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வகப் பிரிவின் தலைமை விஞ்ஞானி வாங் காங் இத்தகவலை உறுதி செய்துள்ளார். இந்த ஆய்வு முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித குறுக்கீடே தேவைப்படாத வகையில் இந்த வாகனம் உருவாக்கப்படுவதாகவும் அதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரைவர் தேவைப்படாத வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை சீன அரசு ஏப்ரல் 12-ம் தேதி வெளியிட்டது. அலிபாபா நிறுவனம் தொடர்ந்து டிரைவர் தேவைப்படாத வாகனங்களை உருவாக்குவதற்காக இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற 50 தொழில்நுட்ப வல்லுநர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவில் அலிபாபா நிறுவனத்துக்கு போட்டியாக விளங்கும் பாய்டு மற்றும் டென்சென்ட் நிறுவனங்கள் ஏற்கெனவே டிரைவர் தேவைப்படாத வாகன உருவாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதையடுத்து அலிபாபா நிறுவனமும் இத்தகைய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்