டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 34

By செய்திப்பிரிவு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 15) அன்று பகுதி - 33இல் ‘நுண்ணறிவு - 2’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘கணிதம் - 5’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

கணிதம் - 5

1. ஒரு பொருளை A ,10% லாபத்தில் B க்கும், B அப்பொருளை 20% லாபத்தில் C க்கும் விற்கிறார்கள். C அப்பொருளை ரூ.5,280 கொடுத்து வாங்கியிருந்தால் A அதை வாங்கிய விலை என்ன?
அ) ரூ.4,000 ஆ) ரூ.4,200 இ) ரூ.4,800 ஈ) ரூ.4,400

2. ரூ.106, P,Q,R ஆகிய மூவருக்குப் பிரித்து அளிக்கப்படுகிறது. P என்பவர் Qஐவிட ரூ.14 அதிகம் பெறுகிறார். Q என்பவர் Rஐவிட ரூ.16 அதிகம் பெறுகிறார் எனில் மூன்று பேருக்கும் கிடைக்கும் தொகைகளின் விகிதம் என்ன?
அ) 25 : 18 : 10 ஆ) 10 : 18 : 25
இ) 1 : 2 : 3 ஈ) 24 : 32 : 15

3. 45, 65, 35, 42, 75, 21, 64, 53- இன் சராசரி என்ன?

அ) 50 ஆ) 48 இ) 53 ஈ) 49

4. 45, 65, 35, 42, 75, 21, 64, 53 - இன் இடைநிலை என்ன?

அ) 45 ஆ) 50 இ) 53 ஈ) 49

5. 201, 208, 215, .........369 என்கிற தொடரில் எத்தனை உறுப்புகள் உள்ளன?

அ) 26 ஆ) 24 இ) 25 ஈ) 27

6. 31 முதல் 121 வரை எத்தனை ஒற்றைப்படை எண்கள் உள்ளன?

அ) 45 ஆ) 46 இ) 47 ஈ) 44

7. ஒரு கார் முதல் 30கி.மீ தொலைவை மணிக்கு 15கி.மீ., வேகத்திலும் 50 கி.மீ தொலைவை 25கி.மீ. வேகத்திலும் ஓடிக் கடக்கிறது எனில், மொத்த பயண தொலைவில் அந்த கார் மணிக்கு ஓடிய சராசரி வேகம் என்ன?
அ) 20 கி.மீ/மணி ஆ) 15 கி.மீ/மணி இ) 25கி.மீ/மணி ஈ) 30கி.மீ/மணி

8. 7x - 5 = 23 எனில் x இன் மதிப்பு என்ன?
அ) 5 ஆ) 7 இ) 4 ஈ) 3

9. 20 பசுக்களுக்கு 36 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருள் உள்ளது. அவ்வுணவுப் பொருள் 16 பசுக்களுக்கு எத்தனை நாட்களுக்கு வரும்?
அ) 50 ஆ) 40 இ) 48 ஈ) 45

10. 2010 இன் 16 2/3% என்ன?
அ) 345 ஆ) 335 இ) 350 ஈ) 365

11. 1500 இன் 75% இன் 40% யாது?
அ) 550 ஆ) 600 இ) 500 ஈ) 450

12. ஓருவர் தான் வாங்கிய ஒரு பொருளை ரூ.800 எனக் குறித்து இரு தொடர் தள்ளுபடி செய்து ரூ. 612க்கு விற்கிறார். ஒரு தள்ளுபடி 15% எனில் மற்றொரு தள்ளுபடி என்ன?
அ) 20% ஆ) 15% இ) 10% ஈ) 18%

13. ஒரு சதுரத்தின் பக்கத்தின் அளவை 20% அதிகரித்தால் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?

அ) 44 ஆ) 40 இ) 50 ஈ) 42

14. 20 பொருட்களின் சராசரி விலை ரூ.450, 30 பொருட்களின் சராசரி விலை ரூ. 300. மொத்த 50 பொருட்களின் சராசரி விலை என்ன?
அ) ரூ.380 ஆ) ரூ.360 இ) ரூ.380 ஈ) ரூ.420

15. 60 பொருட்களின் விற்பனை விலை 75 பொருட்களின் வாங்கும் விலைக்குச் சமம் எனில் லாப/நட்ட சதவீதம் யாது?
அ) லாபம் 20% ஆ) நட்டம் 25% இ) லாபம் 25% ஈ) நட்டம் 20%

16. ஒரு வகுப்பில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை விகிதம் 5 : 3. வகுப்பில் உள்ள மாணவியரின் எண்ணிக்கை 15 எனில் மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
அ) 25 ஆ) 20 இ) 30 ஈ) 40

17. அடுத்தடுத்த மூன்று எண்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை 365 எனில் அவ்வெண்களின் கூட்டுத்தொகை என்ன?
அ) 32 ஆ) 34 இ) 35 ஈ) 33

18. சுருக்குக: 97 × 84 ÷ 4.2
அ) 970 ஆ) 1940 இ) 194 ஈ) 19.4

19. 5% ஆண்டு வட்டிக்கான தனிவட்டி ஒரு நாளைக்கு ரூ.1 எனில் அதன் அசல் என்ன?
அ) ரூ.7,300 ஆ) ரூ.3,650 இ) ரூ.730 ஈ) ரூ.73,000

20. ஒரு கூடையில் உள்ள 15% ஆப்பிள்களின் எண்ணிக்கை 75 எனில் அக்கூடையில் உள்ள ஆப்பிள் பழங்களின் மொத்த எண்ணிக்கை என்ன?
அ) 750 ஆ) 1125 இ) 500 ஈ) 600


பகுதி 33 இல் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்

1. அ) TUVEFOU

2. ஈ) 44

3. ஆ) 5625

4. இ) 25

5. அ) 192

6. இ) 4

7. ஆ) 728

8. ஈ) ஞாயிறு

9. ஈ) சகோதரர் அல்லது சகோதரி

10. ஆ) திங்கள்

11. அ) 276

12. இ) 15

13. ஆ) 9

14. அ) 90

15. இ) ஜப்பான்

16. அ) ஜூடோ

17. ஈ) பட்டி

18. ஈ) GJUK

19. ஆ) கனிமம்

20. அ) மானிடவியல்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

வணிகம்

21 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்