டிஎக்ஸ்சி வழங்கும் கல்வி உதவித்தொகை

By செய்திப்பிரிவு

பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு டிஎக்ஸ்சி தொழில்நுட்ப நிறுவனம் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஸ்காலர்ஷிப்பை அறிவித்துள்ளது.

தகுதி: பயனாளர்கள் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் B.E./ B.Tec/ 2021-22 முதல் கல்வி ஆண்டில் பொறியியல் பிரிவுகளான CS/IT/EE/EC படிப்பவர்களாக இருக்க வேண்டும். 60 சதவீதம் மதிப்பெண்களைக் கடந்த ஆண்டு அவர்கள் படித்த வகுப்பில் பெற்றிருக்க வேண்டும். மாணவரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 4 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளிகளான மாணவர்கள் வேறு எந்த வகையிலும் கல்வி உதவித் தொகையை ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பெறாதவராக இருக்க வேண்டும். இந்தக் கல்வி உதவித்தொகையை டிஎக்ஸ்சி மற்றும் Buddy4study நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள் பெற முடியாது.

உதவித்தொகை: கல்விக் கட்டணத்தில் 50 சதவீதம் அல்லது ஆண்டுக்கு ரூபாய் 40 ஆயிரம் (இதில் எது குறைவாக இருக்கிறதோ அது வழங்கப்படும்).

மாணவர்கள் இணையவழியில் இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஆகஸ்ட் 15. விண்ணப்பிப்பதற்கான இணைய தளம்: https://bit.ly/3jFeiVy

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

36 mins ago

சுற்றுச்சூழல்

46 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

41 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்