பத்திரப் பதிவுத் துறையின் இ-சேவைகள் என்ன?

By ஷ்யாம் சுந்தர்

தமிழ்நாடு பத்திர பதிவுத் துறையில் பொது உபயோகத்திற்காகப் பல ஆன்லைன் சேவைகள் உள்ளன. சொத்து வழிமுறை மதிப்புகள், வில்லங்க பதிவுகள், முத்திரை தாளுக்கான ஆன்லைன் கட்டணம், பத்திர முன்பதிவு போன்ற பல அம்சங்கள் சேவைகளாக வழங்கப்படுகின்றன.

ஆன்லைன் வழிகாட்டு மதிப்பு

உங்கள் பகுதியின் வழிகாடு மதிப்பை >www.tnreginet.net என்ற இணையத்தில் பார்க்க முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இணையத்தில் கைடுலைன் தேடுதல் பகுதிக்குச் சென்று தெரு அல்லது சர்வே எண், மண்டலம் (9 மண்டலங்கள் உள்ளன), சார் பதிவாளர் அலுவலகம், கிராமம், சர்வே எண் அல்லது தெரு பெயர் பூர்த்தி செய்து விண்ணப்பித்தால் போதுமானது.

மேலும் சொத்தின் நில வகைப்பாடுடன் அந்த சொத்தின் இதர விவரங்கள் குடியிருப்பு நிலம், வணிக நிலம், விவசாய நிலம், அல்லது புறம்போக்கு நிலம் போன்ற அம்சங்கள் குறிப்பிடவும் வேண்டும். இந்த விவரங்களைச் சரியாக நிரப்பினால் வழிகாட்டு மதிப்பை தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைன் வில்லங்கச் சான்றிதழ்

இந்தியாவில் முதன் முதலில் ஆந்திரபிரதேசத்தில் அனைத்து சொத்துக்களின் வில்லங்கம் சரிபார்க்கும் முறை 2012-ல் ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மகாராஷ்ட்ரத்தில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இணையத்தில் வில்லங்க சான்றிதழ் சரிபார்க்கும் நடைமுறை அமலில் உள்ளது. இந்தச் சேவையை இந்தியாவில் பின்பற்றும் 3-வது மாநிலம் தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சொத்துகளின் வில்லங்கங்களை இணையத்தில் சரிபார்க்கும் முடியும். பத்திர பதிவுத் துறையின் இணையதளத்தில் சென்று வில்லங்கம் சரிபார்க்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். பிறகு வில்லங்கம் அல்லது பத்திரப்பதிவை தேர்வு செய்ய வேண்டும்

வில்லங்கத்தைத் தேர்வு செய்தால் சொத்தின் மண்டலம், மாவட்டம், சார் பதிவாளர் அலுவலகம், கிராமம் மற்றும் தேர்வு செய்யும் ஆண்டுகள், சர்வே எண், உட்பிரிவு போன்ற விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். தற்போது 1987-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்த விவரங்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம். அனைத்து சொத்தின் விவரங்களையும் இணையத்தில் சரிபார்க்க முடியும். பவர் பத்திரம் (2010-க்கு முன்) மற்றும் உயில் பத்திரங்களின் தகவல்களை இணையத்தில் பார்க்க இயலாது. ஒரு வேளை பத்திர எண் மூலம் தேர்வு செய்யுமேயானால் குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு எண், பதிவு செய்த ஆண்டு ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பத்திர பதிவு கட்டணங்கள் செலுத்தும் முறை

பத்திர பதிவுத் துறை இணையதளத்தில் இச்சேவையைப் பெற முதலில் பதிவு செய்ய வேண்டும். இச்சேசையைப் பெற அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிட வேண்டும். இச்சேவை பாரத ஸ்டேட் பாங்க், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பாங்க ஆப் பரோடா, யூனியன் பாங்க ஆப் இந்தியா போன்ற குறிப்பிட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

பத்திரப் பதிவு முன்பதிவு

ஒருவர் ஒரு மாதம் முன்பே குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு செய்ய விரும்பினால் தமிழ்நாட்டில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். இச்சேவை தமிழ்நாடு தவிர ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, கேரளாவிலும் அமலில் உள்ளது.

கட்டுரையாளர்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

உலகம்

29 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

45 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்