திரைச்சீலைகள்: அழகு சேர்க்கும் திரைச்சீலைகள்

By செய்திப்பிரிவு

வீட்டுக்குள் தூசி புகுவதைத் தடுப்பவை; மிதமான வெளிச்சத்தை வீட்டுக்குள் விழவைப்பவை. சமீப ஜன்னல் திரைகள் வீட்டுக்கு அழகு சேர்ப்பவை. ஜன்னல்கள் வீட்டுக்கு வெளிச்சத்தையும் காற்றையும் கொண்டு வருபவை. திரைச்சீலைகள் தங்கள் பங்குக்கு வீட்டுக்கு அழகைச் சேர்ப்பவை.

வீட்டை அழகுபடுத்த பலவிதமான நவீன முறைகள் வந்தாலும் ஜன்னல் திரைகள் பல காலம் தொட்டே அந்த இடத்தைப் பிடித்துவருபவை. இன்று நவீன காலத்துக்குத் தகுந்தாற்போல் பலவிதத்தில் திரைச்சீலைகள் கிடைக்கின்றன.

திரைச்சீலைகளை அமைத்துத் தர இப்போது நிறுவனங்கள் உள்ளன. வீட்டுக்குத் தகுந்தாற்போல் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் வந்து வீட்டைப் பார்த்து திரைச்சீலைகளை அமைத்துத் தருவார்கள். அவர்கள் எந்த வண்ணத்தில் வீட்டுத் திரைச்சீலை அமைக்கலாம் என்பதற்கு ஆலோசனைகளும் தருவார்கள்.

வீட்டுக்கு, ஜன்னல்களுக்குத் திரைகள் இடத் தீர்மானித்துவிட்டால் உடனடியாகக் கிடைக்கின்ற திரைகளை வாங்கி மாட்டிவிடக் கூடாது. முதலில் என்ன நிறத்தில் திரைச் சீலைகள் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் அறைக்கு என்ன வண்ணத்தில் பெயிண்ட் அடித்திருக்கிறீர்களோ அந்த வண்ணத்திற்கு ஏற்றார்போல் திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக நீல வண்ணம் பூசியிருந்தீர்கள் என்றால் அதற்குத் தோதாக அடர் நீல வண்ணத்தில் திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கலாம்.

சிலருக்கு நேரெதிர் வண்ணம் பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் அடர் மர வண்ணம் தேர்ந்தெடுக்கலாம். சுவரின் வண்ணம் மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் சோபா போன்ற அறைக்கலன்கள் அடிப்படையிலும் திரைச்சீலையின் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அடர் நிறங்களைவிட மெல்லிய வெளிர் நிறங்களே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

திரைச்சீலைகள் தேர்வில் இப்போது பல விதமான வகைகள் வந்துவிட்டன. தேர்ந்தெடுக்கும் பொருட்களிலிருந்து இதைப் பலவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். துணியில், பிளாஸ்டிக் பொருளில், மர நார்களில், மூங்கில் கம்புகளில் எனப் பலவிதமான திரைச் சீலைகளைச் சந்தையில் பார்க்க முடிகிறது.

திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு கருப்பொருளை வைத்துக்கொள்வது நல்லது. படுக்கையறைக்கு ஒரு விதமான திரைச்சீலையைத் தேர்ந்தெடுத்தால் வரவேற்பறைக்கு வேறு விதமான திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கலாம். மரப் பொருளான திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டுக்கு ஒரு கம்பீரத் தோற்றம் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல் திரைச்சீலைகளில் இப்போது நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஓவியங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவை வீட்டுக்கு ஒரு கலையம்சத்தைத் தரும். இல்லையெனில் பூக்கள் படம் கொண்ட திரைச்சீலைகளை மாட்டும்போது ஒரு இதமான மனநிலையை அளிக்கக் கூடும். சிலருக்கு இதுவும் விருப்பமில்லை எனும்போது வெறுமனே ஒரே வண்ணத்தில் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

அதே சமயத்தில் ஒரே விதமான திரைச்சீலைகள் மட்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. திரைச்சீலைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். ஒரு மாதம் பிளாஸ்டிக்கால் ஆன திரைச்சீலை என்றால் அடுத்த மாதம் துணியால் வேறு வண்ண திரைச்சீலையைப் பயன்படுத்தலாம்.

திரைச்சீலைகள் வீட்டைத் தூசிகளிலிருந்து காப்பவை. ஆதலால் வெளியிலிருந்து வரும் தூசிகள் திரைச்சீலையில் படிந்து இருக்கும். நாள் கணக்காக அதைச் சுத்தம் செய்யாமல் விடக் கூடாது. அதனால் வாரம் ஒரு முறையேனும் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும்.

- குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்