பனிக் காலப் பராமரிப்பு

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு பருவ காலத்துக்கும் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது வாடிக்கை. அதற்கேற்றவாறு நமது உடலைப் பராமரித்துக்கொள்கிறோம். அதைப் போலவே நாம் குடியிருக்கும் வீட்டிலும் பருவ காலத்தைப் பொறுத்துப் பராமரிக்க வேண்டியது அவசியமே. பருவ காலம் மாறும்போது தட்பவெப்ப நிலையும் மாறும். அதற்கேற்றபடி கட்டிடத்தின் சில மாற்றங்கள் ஏற்படவே செய்யும். வெயில் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் அதற்கேற்றபடி பொருள்கள் சிறிது விரிவடையும் ஆகவே இதன் காரணமாகக் கட்டிடங்களிலும் வீட்டின் புழங்கு பொருள்களிலும் சில மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. அதன் காரணம் என்னவென்று அறியாவிட்டாலும் அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் எதிர்கொண்டிருப்போம்.

இப்போது பனிக் காலம் தொடங்கிவிட்டது. பனிக் காலத்தின் போது குளிர் அதிகமாகத் தாக்கும். அந்தத் தாக்குதலைச் சமாளிக்க வீடுகளில் சில ஏற்பாடுகளைச் செய்வோம். இந்தக் காலத்தில் பொதுவாக அதிகமாக சன்னல் கதவுகளைத் திறக்க வேண்டிய அவசியம் ஏற்படாது, ஏனெனில் குளிர் காற்றுக்குப் பயந்து வீட்டின் சன்னல்களை அடைத்தே வைத்திருப்போம். இதனால் வீட்டுக்குள் சூரிய ஒளி வரும் வாய்ப்பைத் தடுத்துவிடுகிறோம். எனவே வீட்டின் உள்ளே ஈரப்பதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

அதிகமான ஈரப்பதம் வீட்டுக்குள் நிலவும்போது அது நமது உடல்நிலையைப் பாதித்துவிடும். எனவே அதைத் தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே முடிந்தவரை வீட்டுக்குள் ஈரத் துணியை உலர்த்துவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். குளியலறை, சமையலறை போன்றவற்றில் தண்ணீர் பயன்பாட்டுக்கான குழாயில் நீர்க் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் பழுது இருப்பின் காலம் தாழ்த்தாது சரிசெய்ய வேண்டும்.

பனிக் காலத்தில் நமது வீடுகளில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தும் தேவை ஏற்படாது. ஆகவே அதைப் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். ஆனால் அடுத்து கோடைக் காலம் வரும்போது மீண்டும் குளிர்சாதன வசதி தேவைப்படும். எனவே இப்போதே அவற்றைப் பராமரித்துக்கொள்ள வேண்டும். இப்போது அதைப் பராமரிக்கும் தொழிலாளர்கள் கிடைப்பதும் எளிது.

ஆகவே குளிர்சாதன வசதி இயந்திரத்தில் ஏதேனும் பழுது இருந்தாலோ, காலக்கிரமப் பராமரிப்பையோ முடித்துக்கொள்ள இதுவே தக்க தருணம். இப்போது அவற்றைச் சரிசெய்து வைத்துக்கொண்டீர்கள் என்றால் கோடைக்காலத்தில் புலம்ப வேண்டிய தேவை இருக்காது. அந்த நேரத்தில் ஆட்கள் கிடைப்பதும் கடினம்.

பனிக் காலம் மரச் சாமான்களுக்கு ஏற்ற பருவம் அல்ல. பொதுவாக எல்லா மரப் பலகையிலும் சிறிதளவு நீர்த் தன்மை காணப்படும். ஆகவே அதன் உருவ அமைப்பு நீர்த் தன்மை அதிகரிக்கும்போது மாறிவிடக் கூடும். இதனால்தான் கதவுகளின் வடிவம் பனிக் காலத்தில் சிறிது மாறிவிடுகிறது. ஆகவே வீடுகளின் கதவுகள், சன்னல் கதவுகள் போன்றவற்றை மூடித் திறப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

எனவே அவற்றை சரிசெய்துகொள்ள வேண்டும். மரப் பலகைகளை முறையே உலர்த்திய பின்னர் கதவுகளை உருவாக்கியிருந்தால் இந்தப் பிரச்சினை பெரிய அளவில் எழ வாய்ப்பில்லை. மேசை, நாற்காலி போன்ற மர அறைக்கலன் களையும் பனிக் காலத்தில் தேவையான அளவில் எண்ணெய் போட்டுத் துடைத்து முறையே பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அவை பழுதாகிவிடக் கூடும். பனிக் காலத்துக்கு ஏற்றபடி வீட்டையும் வீட்டில் உள்ள அறைக்கலன் களையும் சரியானபடி பராமரித்துக் கொண்டால் இந்தப் பருவத்தில் வீடு பற்றிய கவலை எழாமல் பார்த்துக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்