செல்லப் பிராணிகளுக்கு ஒரு வீடு

By விபின்

நமக்கு ஒரு சொந்த வீடு இருப்பதுபோல நம் செல்லப் பிராணிகளுக்கும் சொந்த வீடு வேண்டாமா? நாய்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களுடன் வாழ்ந்து வருகின்றன. அதற்கு முன்பும் நாய்களை வேட்டைத் துணைக்குப் பயன்படுத்தி வந்தனர். எகிப்தியர்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்காக மண்ணால் ஆன வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். சீனர்கள் தங்கள் வீட்டையே செல்லப் பிராணிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர். இன்றைக்குள்ள நாய் வீட்டின் வடிவம் முதன் முதலில் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு நாய்கள் வேட்டைக்காக அல்ல; உற்ற துணைக்காக வளர்க்கப்படுகின்றன. அந்தச் செல்லப் பிராணிகளுக்கான வீடுகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில:

சாஃப்ட் சைடட் பெட் ஹவுஸ்

இது கையடக்கச் செல்லப் பிராணிகளின் வீடு. நாம் பிரயாணத்தின்போது எடுத்துச் செல்லும் பை போன்று இருக்கும். ரெக்ஸின், தோல் ஆகியவற்றைக் கொண்டு இந்த வகை வீடு தயாரிக்கப்படுகிறது. இந்த வகை, சிறிய நாய்கள் அல்லது குட்டிகளுக்கு ஏற்றது.



பிளாஸ்டிக் வீடு

இது பாரம்பரிய வீடு வடிவமைப்பு முறையில் அமைக்கப்படுவதுதான். ஆனால் பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.



கூண்டு வீடு

இந்த வகை, இரும்பு அல்லது அடர்த்தியான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படுவது. வலை போன்று இந்த வகை நாய் வீடு உருவாக்கப்படும். வீட்டில் நிரந்தரமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றது. இது சிறிய வகை நாய்களில் இருந்து பெரிய நாய்கள் வரை எல்லா நாய்களுக்கும் ஏற்றது.



டெண்ட் வீடு

இது கையுடன் எடுத்துச் செல்லும் வகையிலான வீடு. வெளியூர் பிரயாணத்துக்கு அழைத்துச் செல்லும்போது செல்லப் பிராணிகளுக்கு நம் அருகிலேயே ஒரு வீட்டை உருவாக்கித் தரலாம்.



பாரம்பரிய வீடு

இது முதன்முதலில் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட நாய் வீடு. இது பெரும்பாலும் மரத்தால் உருவாக்கப்பட்டது.



நவீன வீடு

இது பாரம்பரிய வீடு முறையிலிருந்து வேறுபட்டு பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்படுகிறது. வீடு கட்டும் முறையில் வந்துள்ள நவீன முறைகளைப் பிரதிபலிக்கும் வகையில் நவீன செல்லப் பிராணிகளுக்கான வீடு உருவாக்கப்படுகின்றன.



கென்னல்

இது அடர்த்தியான பிளாஸ்டிக்கால் செய்யப்படுவது. இதுவும் பிரயாணத்தின்போது பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படுவது. இந்த வகையும் சிறிய நாய்கள் அல்லது குட்டிகளுக்கு ஏற்றது.



பனி வீடு

இது செல்லப் பிராணிகளுக்கு பனிக் காலத்தில் ஏற்றது. நாம் ஸ்வெட்டர் அணிவதுபோல இந்த வீடு செல்லப் பிராணிகளை முழுவதுமாக மூடுகிறது. பழங்குடிகளின் வீடு போல இது இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்