சமையலறை எப்படி இருக்க வேண்டும்?

By உமா மகேஷ்வரன்

வீட்டில் உள்ள பெண்கள் அதிகமாக நேரத்தைச் செலவிடும் அறைகளில் முதன்மையானது சமையலறை. ஆனால், பல வீடுகளில் சமையலறைகளைப் பார்ப்பதற்கே அலங்கோலமாக இருக்கும். சமையலறைக்குரிய வசதிகள் எவையும் பெரிதாக இருக்காது.

ஆனால், எல்லாத் தேவைகளையும் உள்ளடக்கிய மாடுலர் கிச்சன்கள் அறிமுகமான பிறகு சமையலறையின் முகம் மாறிவிட்டது. பழைய சமையலறை, மாடுலர் கிச்சன் என எந்த வகை சமையலறையாக இருந்தாலும் சில தவிர்க்க முடியாத அம்சங்களும் வசதிகளும் சமையலறைக்குக் கண்டிப்பாகத் தேவை. அந்த வகையில் சமையலறையில் தேவையான முக்கிய வசதிகள் என்னென்ன?

ஒரு சமையலறை குறைந்தபட்சம் 8-க்கு 10 அடி என்ற கணக்கிலாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். ஓரளவு இடம் பெரியதாக இருந்தால்தான் சமையல் சாமான்களையும் மளிகைப் பொருட்களையும் அலமாரி அமைத்து வைக்க முடியும்.

சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டியை ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் அமைப்பது நல்லது. சிமெண்ட் அல்லது கற்களால் அமைக்கப்படும் தொட்டியைவிடத் தண்ணீரைச் சுலபமாக வெளியேற்ற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொட்டி சிறப்பானது.

kitchen 2jpg

சமையலறை மேடையின் உயரம் 34 அங்குலம் இருப்பது நல்லது. இது காஸ் சிலிண்டரை உள்ளே வைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

சமையலறை என்றால், நிச்சயம் வெப்பம் இருக்கவே செய்யும். அதற்காக மின் விசிறிகளைச் சமையலறையில் வைப்பது நல்லதல்ல.   எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு சமையலறையில் குறைந்தபட்சம் 5 மின் இணைப்பு பாய்ண்டுகளை வைப்பது புத்திசாலித்தனம்.

சமையலறை என்றால், புகைபோக்கி நிச்சயம் இருக்க வேண்டும். பழைய வீடுகளில் இது நிச்சயம் இருக்கலாம். ஆனால், இப்போது கட்டப்படும் வீடுகளில் புகைபோக்கிகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. குறிப்பாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புகைபோக்கிகளை அமைப்பதும் கடினமானது. புகைபோக்கிகளுக்கு மாற்றாக, சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் புழக்கத்திற்கு வந்துவிட்டது.

தற்போது சமையலறைகளில் சிம்னி வைப்பதைச் சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இது ஒரு சிறந்த முறையும்கூட. சிம்னி உபயோகிக்கும்போது அது கார நெடிகளையும் எண்ணெய்ப் பிசுக்குகளையும் சேமித்து வைத்துக்கொள்ளும். அதை அடிக்கடி நாம்  சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இயந்திரம் கெட்டு விடும்.

சமையலறைக்குப் பயன்படுத்தும் ‘சிம்னி ஹாப்’ எனப்படும் அடுப்பு தரமாக இருப்பது அவசியம்.

சமையலறை  மேடைக்கு மேல் பளிங்குக் கற்களைப் பயன்படுத்துவது நல்லது. மேடைக்கு மேல் 2 அடி உயரத்துக்கு டைல்ஸ் பயன்படுத்தலாம்.

சமையலறையில் முக்கியமான பகுதி அலமாரி. உணவு பொருட்களை இங்கு வைத்துப் பெண்கள் பாதுகாப்பார்கள். உணவுப் பொருட்கள் உள்ள இடம் என்பதால் இங்குப் பூச்சிகள் வரவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் அலமாரி விரைவில் பூச்சிகளால் துளைகள் இடப்பட்டுப் பாதிப்புக்குள்ளாகும். எனவே, அதன் உள் மற்றும் வெளிப்புறங்களை லேமினேட் செய்வது நல்லது.

அலமாரிகளுக்கு வர்ணம் பூசுவதன் மூலம் பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே கூடுமானவரை வர்ணம் உபயோகிப்பதைத் தவிர்த்து லேமினேட் செய்வது சிறந்தது.

மாடுலர் கிச்சன்களில் பிளைவுட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் நீர் உறிஞ்சா பிளைவுட் பயன்படுத்துவது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

க்ரைம்

52 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்